அதற்குள் சுதாரித்திருந்த விவேக்,
“பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்லை லாவி... யார் உன் கிட்ட கம்ப்ளேயின்ட் செய்தது?” என்றான் அக்கறை இல்லாததுப் போல்!
“ஒருத்தரா சொன்னாங்க? உன்னோட அம்மா, அண்ணி, தங்கை, அப்புறம் பாரதியும் கூட...”
“பாரதியா???”
“ஆமாம்! பாரதியும் என் கிட்ட பேசினாங்க...”
“ப்ச்...” என அலுத்துக் கொண்டான் விவேக்!
“விவேக்??? என்ன தான் உனக்கு பிரச்சனை? ஏன் இப்படி எல்லோரையும் கஷ்டப்படுத்துற?”
“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை லாவி... அவங்க அவங்களா எதையாவது யோசிச்சிட்டு என் மேல பழியை போடுறாங்க... எவ்ரிதிங் இஸ் ஃபைன்!”
“இல்லை விவேக்... பொய் சொல்லாதே... ஒருத்தர் சொன்னால் பரவாயில்லை, இப்படி எல்லோரும் சொன்னா என்ன அர்த்தம்?”
“மண்ணாங்கட்டி! லாவி, எனக்கு நிறைய வேலை இருக்கு... உனக்கே தெரியும்...”
“ஓ! அப்போ நான் தான் வேலை வெட்டி இல்லாமல் இருக்கேனா?”
“நான் அப்படி சொன்னேனா என்ன?”
“இதோ பார் விவேக், கற்பகம் ஆன்ட்டி என் கிட்ட உன்னைப் பத்தி சொன்னப்போ கூட, அவங்க ஏதோ கில்ட்டி கான்ஷியன்ஸ்ல பேசுறாங்கன்னு தான் நினைச்சேன்... ஆனால் பாரதி கிட்ட