(Reading time: 5 - 9 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 16 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

கிருத்திகா கிச்சனை அடைந்தப் போது அங்கே ஒரே களேபரமாக இருந்தது...!

  

மிருதுளா போதும் நிறுத்துங்க...” மிருதுளாவிடம் சொல்லிக் கொண்டிருந்த கீதா, கிருத்திகா வந்ததும் பேச்சை பாதியில் நிறுத்தினாள்!

  

கிருத்திகா கீதாவையும், மிருதுளாவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

   

மலர்ந்திருந்த கீதாவின் முகம் வெட்கத்தில் சிவந்து மின்னிக் கொண்டிருந்தது...! மிருதுளாவின் முகத்தில் எப்போதும் போல புன்னகை இருந்தது!

  

இங்கே என்ன செய்துட்டு இருக்கீங்க இரண்டுப் பேரும்???? தண்ணி எடுத்துட்டு வரேன்னு போனவங்களை காணும்னு, அவங்களை தேடி போனவங்களையும் காணும்...! இங்கே வந்துப் பார்த்தா, இரண்டுப் பேரும் என்னை தனியே விட்டுட்டு கதை பேசிட்டு இருக்கீங்க???”

  

கிருத்திகாவின் கேள்வியைக் கேட்டு மிருதுளா சிரித்தாள்!

   

கதையா, நீ வேற! இரண்டுப் பேர் என் கிட்ட கையும் களவுமா மாட்டிக்கிட்டாங்க... இங்கே என்ன...”

  

கீதா அவசரமாக மிருதுளாவின் கையை பிடித்து கெஞ்சுவதைப் போல் பார்த்தாள். அதை ஏற்றுக் கொள்வதுப் போல தலை அசைத்த மிருதுளா,

  

அதை விடு கிருத்திகா, நீ சின்ன பொண்ணு...” என்றாள்!

  

சின்ன பொண்ணா???? யாரு நானா?” கிருத்திகா கேட்டுக் கொண்டிருக்கும் போதே,

  

கீத்ஸ்...” என்று அழைத்த விஜயின் குரல் எங்கிருந்தோ ஒலித்தது!

  

என்னங்க...” என்றாள் கீதா அங்கேயே இருந்து...

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.