அந்தாளோட குணம் உன்கிட்ட கொஞ்சம் கூட இல்லை உங்கப்பா எங்களை அடிமை போல நடத்தறாரு ஆனா, நீ தங்க இடம் கொடுத்து சாப்பாடு கொடுத்து நல்லபடியா கவனிச்சிக்கற, உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு, கண்டிப்பா ஒரு நாள் உன்னால பிரிஞ்சிருக்கற இந்த ஊர் ஒண்ணு சேரும் பாரு”
”அந்த விசயம் கண்டிப்பா நடக்கும், அதுக்கு முதல்ல நம்ம கல்யாணம் நடக்கனும்”
”என்னால உங்கப்பாகிட்ட பேச முடியுமான்னு தெரியலை நீதான் பேசனும்”
”சரி நானே பேசறேன் விடியட்டும் பார்த்துக்கலாம், நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க நான் காலையில வந்து உங்களை பார்க்கிறேன்” என சொல்லிவிட்டு ஆண்டாள் சென்றதும் சட்டென கிளம்பினான் ஈஸ்வரன்.
வீட்டை விட்டு பின்வாசல் வழியாக வெளியேறி புளியமரத்திடம் வந்தான். அவனது கூட்டாளிகள் அங்கு அவனுக்காக காத்திருந்தார்கள்
”வா ஈஸ்வரா என்னாச்சி அந்த பொண்ணுகிட்ட பேசினியா“
”ம் பேசினேன் என் மேல ரொம்ப அன்பு பொழியறா, நினைச்சாலே சந்தோஷமா இருக்கு, என்னோட காயத்துக்கு மருந்து போட்டு எனக்கு சாப்பாடு தந்தா தெரியுமா”
”பரவாயில்லையே நல்ல பொண்ணாதான் இருக்கா ஆவுடையப்பனோட குணம் அவள்கிட்ட இல்லாதது நமக்கு ஒரு ஆறுதலான விசயம், சரி உங்க கல்யாணம் எப்படி நடக்கும்“
”விடிஞ்சதும் அப்பாகிட்ட பேசிட்டு தகவல் தர்றதா சொல்லியிருக்கா, நாம இங்க இருக்க வேணாம் கிளம்பலாம் யார் கண்லயாவது பட்டா வம்பாயிடும்”
”சரி வா வழக்கம் போல நம்ம இடத்துக்கு போகலாம்” என சொல்லிவிட்டு ஒருவன் திரும்பி நடக்க முயல அவனின் முதுகில் ஈஸ்வரன் கத்தியால் ஒரு கீறு கீறினான். அதில் அவன் அலறினான் மற்றவர்கள் என்னவென பார்த்துவிட்டு ஈஸ்வரனிடம்