(Reading time: 22 - 44 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

வழியாவே கிளம்பலாம்” என அழைக்க அவர்களும் சரியென கிளம்ப ஈஸ்வரனோ

  

”நான் போய் ஆண்டாள்கிட்ட நடந்ததை சொல்லிட்டு வந்துடறேன் பாவம் அவள் எனக்காக காத்திருப்பா“

  

”அப்ப சரி நீ போய் பேசிட்டு வா, நாங்க தோட்டத்துல இருக்கற புளியமரத்துக்கிட்ட காத்திருக்கோம்” என சொல்லிவிட்டு கூட்டாளிகள் சென்றுவிட ஈஸ்வரன் ஆண்டாளை தேடிச் சென்றான்.

  

ஆண்டாளோ அறைக்குள் ஒரே பதட்டமாக இருந்தாள். என்ன நடந்திருக்கும் என கற்பனை கூட செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கவும் ஆர்வமானாள். அறைக்கதவை திறந்துக் கொண்டு ஈஸ்வரன் வரவும் முகம் மலர்ந்தாள், அடுத்த நொடியே அவனின் உடலில் இருந்த காயத்தைக் கண்டு அதிர்ந்தாள்

  

”அய்யோ என்ன இது இப்படி காயப்பட்டிருக்கீங்க” என பதற

  

”பதறாத ஒண்ணும் இல்லை“

  

”இது எங்கப்பாவோட வேலையா”

  

”இல்லை உங்கப்பா என் மேல கைகூட வைக்கலை”

  

”அப்புறம் இதெல்லாம் எப்படி“

  

”என் கூட்டாளிகளோட வேலை”

  

”என்னது”

  

”ஆமாம் ஆண்டாள், நீ சொன்ன விசயத்தை நான் அவங்ககிட்ட சொன்னதும் அவங்களுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சி, என்னை வெட்டிட்டு இங்கிருந்து தப்பிச்சி ஓடிட்டாங்க”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.