(Reading time: 22 - 44 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

என சொல்ல ஆவுடையப்பன் கோபப்படுவான் என எதிர்பார்த்து அதற்கேற்ப என்ன பேசலாம் என்றும் யோசித்து வைத்தான் ஈஸ்வரன் ஆனால், ஆவுடையப்பன் கோபம் கொள்ளவில்லை பலமாக சிந்திக்கலானான். அதைக் கண்ட ஈஸ்வரனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஆறாய் ஓடியது. தான் தீட்டிய திட்டம் வெகு சீக்கிரம் நடக்கப் போகிறதே என அகமகிழ்ந்தான்.

  

”ஐயா எனக்குப் புரியுதுங்கய்யா இப்படி கல்யாணம் செய்தா உங்க கௌரவம் குறைஞ்சிடும்னு நினைக்கிறீங்களா, கண்டிப்பா குறையாதுங்க இன்னும் மக்கள் மத்தியில நீங்க கடவுள் போலதான் தெரிவீங்க, இதுவரை உங்களை எதிர்த்து நின்ன மக்கள் இனிமேல உங்க காலடியில கிடப்பாங்க, யாரும் போராட்டம் செய்ய மாட்டாங்க, உங்களை எதிர்த்து புரட்சியும் வெடிக்காது, உங்க காலத்துக்கு அப்புறம் கூட உங்க தலைமுறையே இப்ப இருக்கறது போலவே இந்த ஊரை ஆளும்ய்யா” என உறுதியாகச் சொல்ல ஆவுடையப்பனுக்கும் நன்றாகவே புரிந்துப் போனது.

  

மெல்ல மெல்ல ஈஸ்வரன் விரித்த வலையில் விழுந்தார் ஆவுடையப்பன்

  

”சரி ஈஸ்வரா இந்த கல்யாணத்தை பத்தி நான் என் பொண்ணுகிட்ட பேசனும், பேசிட்டு ஒரு முடிவு சொல்றேன் அதுவரைக்கும் நீ வெளிய போகாத இந்த வீட்லயே இரு”

  

”நானா நான் எதுக்குங்கய்யா, நீங்க தர்றதா சொன்ன பணத்தை தந்தீங்கன்னா நான் என் குடும்பத்தோட ஏதாவது ஒரு ஊருக்கு போய் தங்கிடுவேன்”

  

”இல்லை இரு அவசரப்படாத ஆமா நீ கொன்ன உன் கூட்டாளிகளோட உடல்கள் எங்க இருக்க“

  

”எதுக்குய்யா கேட்கறீங்க“

  

”அந்த உடல்களை மறைக்கனும் அதான்“

  

”அந்த வேலையை நான் செய்றேன்யா, நீங்க எதுக்கு, வேணாம் நான் செய்த கொலையை நானே மூடி மறைக்கறேன் ஊர்க்காரங்ககிட்ட அவங்க இந்த ஊர்ல இருந்து கஷ்டப்பட

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.