(Reading time: 22 - 44 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

தொடர்கதை - திருமதி அகத்தியன் - 08 - சசிரேகா

   

வுடையப்பன் வீட்டில்

  

”ஆண்டாள் நீ சொல்றதும் நல்ல யோசனைதான் ஆனா, இதை செயல்படுத்த ரொம்ப போராட வேண்டியிருக்கும் உன் அப்பாவையே நீ எதிர்க்கனும், என்கூட நீ வரனும் உன்னால முடியுமா“

  

”நிச்சயம் வரேன் ஊர் நல்லதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்“

  

”வெறும் ஊருக்காகத்தான் என்னை ஏத்துக்க சம்மதிக்கறியா” என கேட்டதும் ஆண்டாளின் முகத்தில் அப்படியொரு வெட்கம். அந்த வெட்கமே காட்டிக் கொடுத்தது, அவளின் உள்ளத்தில் இருந்த காதலை அதை அறிந்த ஈஸ்வரன் இனி ஆண்டாள் தன் பக்கம் என புரிந்துக் கொண்டு

  

”ஆமா உங்கப்பா எப்ப வீட்டுக்கு வருவாரு” என கேட்க அவளோ

  

“என்னை மன்னிச்சிடுங்க, நான் பொய் சொல்லிட்டேன், எங்கப்பா எங்கயும் போகலை, இங்கதான் இருக்காரு“

  

”இங்கயா”

  

”ஆமாம் நீங்க பாட்டுக்கு என் அப்பாவை கொன்னுடுவிங்களோன்னு பயந்து அப்படி பொய் சொன்னேன், அவர் பக்கத்து அறையிலதான் இருக்காரு”

  

”நல்லதா போச்சி அப்ப நீ இங்கயே இரு, நான் போய் அவர்கிட்ட பேசி பார்க்கிறேன்“

  

”இல்லை நானும் வரேன், நானும் பேசறேன்”

  

”பொறு ஆண்டாள் நீ என்ன சொன்னாலும் அவர் ஒத்துக்க மாட்டாரு, நான் அவருக்கு புரியற மாதிரி எடுத்து சொல்லிப் பார்க்கிறேன், அவர் உன்கிட்ட வந்து கேட்கும் போது நீ என்னை விரும்பற விசயத்தை சொல்லனும் சொல்வியா“

  

”நிச்சயம் சொல்வேன்“

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.