(Reading time: 22 - 44 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”கண்டிப்பா நடக்கும் நான் போய் ஆவுடையப்பன்கிட்ட பேசப் போறேன்“

  

”அந்தாளுதான் இல்லையே“

  

”இருக்கான் பக்கத்து அறையில, ஆண்டாள் பொய் சொல்லிட்டா, நாம கொலைகாரங்களா ஆககூடாதுங்கறது அவளோட நல்ல எண்ணம்“

  

”சரி வா போய் பேசுவோம்”

  

”நீங்க வரவேணாம், நான் மட்டும்போய் பேசறேன் அங்க என்ன நடந்தாலும் சரி யாரும் உள்ள வரக்கூடாது, ஏதாவது அசம்பாவிதம் நடந்தா உடனே இங்கிருந்து ஓடிடுங்க, உங்க உயிராவது மிஞ்சட்டும்”

  

”முடியாது வாழ்ந்தாலும் செத்தாலும் உனக்கு துணையாதான் நாங்க நிப்போம்“

  

”ப்ச் நான் போனா என்ன நீங்களாவது நம்ம மக்களை காப்பாத்தனும் அதுக்குதான் சொல்றேன்“

  

”ஆபத்துன்னு தெரிஞ்சுமா போற“

  

”வேற வழியில்லை ஊருக்காக என் உயிரையும் தருவேன், நீங்க எல்லாரும் இங்கயே இருங்க, நான் இப்ப வந்துடறேன்” என சொல்லியவன் அவர்களை அங்கேயே ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு ஆவுடையப்பனை தேடிச் சென்றான்.

  

ஆவுடையப்பன் தன் அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க அவரின் முன் நின்றவன் பலமாக யோசித்தான், சில நொடிகள் கழித்து தான் கொண்டு வந்த கத்தியால் தனது தோளிலும் தொடையிலும் வெட்டுக்காயம் ஏற்படுத்தினான், அதனால வந்த இரத்தத்தை கத்தி முழுவதும் தடவி விட்டு கண்ணில் கண்ணீருடன்

  

”ஐயா ஐயா” என அழுதபடி கூவினான். அந்தச் சத்தம் கேட்டு உறக்கம் கலைந்து

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.