(Reading time: 22 - 44 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”இது போதும் எனக்கு, நீ உள்ளயே இரு, எவ்ளோ சத்தம் கேட்டாலும் நான் வர்றவரைக்கும் இந்த அறையை விட்டு வெளியே வராத, எதுக்கும் நான் தாள்பாள் போட்டுட்டு போறேன்“

  

”எதுக்கு இப்படி செய்றீங்க“

  

”ஒருவேளை உங்கப்பா என் பேச்சை கேட்காம என்னை கொல்ல வந்தார்னா உன்னால என் இறப்பை தாங்கிக்க முடியாதுல்ல அதான்“

  

“அய்யோ வேணாமே“

  

”கவலைப்படாத உனக்காக நான் நிச்சயம் உயிரோட வருவேன்“

  

”அப்ப எங்கப்பா“

  

”அவரையும் நான் கொல்லமாட்டேன் இது சத்தியம்” என சொல்ல ஆண்டாள் சரியென தலையாட்டினாள். ஈஸ்வரனோ சொன்னது போலவே அவளை அறையில் வைத்து கதவை சாத்தி தாள்பாள் போட்டுவிட்டு நேராக தன் கூட்டாளிகளிடம் சென்றான்

  

”என்னவாம் அவளுக்கு ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்கீங்க, என்ன விசயம்”

  

”ஆவுடையப்பனை நாம கொல்ல வேணாம்”

  

”அவள் பேச்சை கேட்டு நீ வேணா நட, நாங்க ஏன் நடக்கனும்”

  

”பொறு முதல்ல அவள் என்கிட்ட சொன்ன விசயத்தை அப்படியே உங்ககிட்ட சொல்றேன்  அப்புறம் முடிவு உங்களோடது” என சொல்லிவிட்டு ஆண்டாளுடன் நடந்த உரையாடலை அப்படியே சொல்ல சொல்ல மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது

  

”இதுவும் நல்ல யோசனைதான் ஆனா இது நடக்குமா”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.