”நான் உங்க பிள்ளை இல்லைன்னு தெரிஞ்சும் என் மேல பாசத்தை பொழிஞ்சீங்க ஆனா, நான் உங்களையே என் கையால கொன்னுட்டேனே“
”அது எனக்கு கிடைச்ச வரம்“
”என்னம்மா சொல்றீங்க“
”ஆமாம் மகனே உங்கப்பாவோட அக்கிரமத்தை தினமும் பார்த்து பார்த்து நான் நொந்துப் போயிட்டேன், எனக்கு வாழனும்ங்கற ஆசையே போயிடுச்சி இனி வாழ்ந்து என்ன பிரயோசனம்னு நினைக்கறப்பதான், உன் அப்பா உன்னை தூண்டிவிட்டு என்னை கொல்ல அனுப்பினாரு, என்னிக்கிருந்தாலும் அவர் கையால நான் சாகவேண்டியது, அதை விட என் மகன் கையால சாகலாம்னு நானே முடிவு எடுத்தேன், நான் செத்தாலாவது அவர் மாறிடுவார், திருந்துவார்ன்னு நினைச்சேன் ஆனா, இல்லை என்ன என்னால என் மருமகளை காப்பாத்த முடியலை, அவளையும் பறிகொடுத்துட்டேன் உனக்கு பிறந்த பெண் குழந்தையையாவது பத்திரப்படுத்தனும்னு அப்ப நம்ம வீட்ல வேலை செய்தவங்ககிட்ட கொடுத்தேன் ஆனா, அவங்களோட ஆண் குழந்தையை உங்கப்பா உன்னோட வாரிசுன்னு சொன்னப்ப எனக்கு வெறுப்பே வந்துடுச்சி, அவர் எப்படி சொத்துக்காக வாரிசு வேணும்னு உன்னை என் மகனா மாத்தி நம்ப வைச்சாரோ அதே போல அகத்தியனையும் ஆக்கிட்டாரு, நடந்த விசயங்களை நினைச்சி நினைச்சி வேதனையில இருக்கறப்ப நீ என்னை கொல்ல வந்த, அதை நான் மனசார ஏத்துக்கிட்டேன்”
”அம்மா என்னை மன்னிச்சிடும்மா” என கதறி கதறி அழுதான் பொன்முடி
”அழாத இப்ப உனக்கு உண்மை என்னன்னு தெரிஞ்சிடுச்சில்ல, இனிமேல நீ நிம்மதியா இரு, நான் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன் நீயே திருந்தினதால நான் உனக்கு உயிர் பிச்சை தர்றேன், இதே போல உன் அப்பாவும் திருந்தி இந்த ஊரை ஒண்ணாக்கிட்டா அவருக்கும் நான் உயிர் பிச்சை தருவேன்”
”அம்மா நீ ஏதாவது உயில் எழுதி வைச்சியா“