(Reading time: 22 - 44 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”அவளோட நல்ல மனசுக்கு கண்டிப்பா ஊர் மக்களுக்கு நல்லதுதான் செய்வா“

  

”செய்யட்டும் என்னோட விருப்பம் ஒண்ணே ஒண்ணுதான், இந்த ஊர் ஒண்ணாகனும், கீழவீதி மேலவீதிங்கற பாகுபாடு இல்லாம மக்கள் சந்தோஷமா ஒத்துமையா வாழனும், நான் வாழும்போதுதான் என் ஆசை நிறைவேறலை, நாச்சியா மூலமா என் ஆசை நிறைவேறினாதான் என்னோட ஆத்மாக்கு சாந்தி கிடைக்கும்”

  

”கண்டிப்பா நாச்சியா உங்க ஆசையை நிறைவேத்துவாம்மா”

  

என சொல்ல ஆண்டாள் மென்மையாக புன்னகைத்தார். அந்த சிரிப்பைக் கண்ட பொன்முடிக்கு தான் இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி கிடைத்தது போலானது.

  

”அம்மா“ என ஏக்கமாக அழைத்தான்

  

”சொல்லுப்பா”

  

”இப்பதான் மனசு லேசா இருக்கும்மா, எல்லா உண்மையும் தெரிஞ்சிக்கிட்ட பின்னாடி எனக்குள்ள ஒரு அமைதி நிலவுதும்மா”

  

”நீ ரொம்ப அசதியா இருக்க தூங்கு, நான் உனக்கு தாலாட்டு பாடறேன்”

  

”தாலாட்டா ஆமாம்மா எத்தனை நாளாச்சி அந்த தாலாட்டை கேட்டு, பாடும்மா நான் நிம்மதியா என் கண்ணை மூடறேன்”

  

”என்னது“

  

”நிம்மதியா தூங்கறேன்னு சொன்னேன்மா” என சொல்ல ஆண்டாளும் அவனுக்காக தாலாட்டுப் பாடிவிட்டு பொன்முடி நிம்மதியாக தூங்குவதாக நினைத்து அங்கிருந்து சென்றாள். அவள் சென்ற அடுத்த நொடி பொன்முடி எழுந்து நின்றான். நடந்த உண்மைகளை நினைத்துப் பார்த்து

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.