அண்ட் என்ஜாய்...”
“ஹ்க்கும்...”
“ரொம்ப அலுத்துக்காதீங்க... அம்மா இப்போ இங்கே வரலையே, கொஞ்ச நாள்ல அவங்களை இங்க வர சொல்லி கூப்பிடுறேன், பேக் செய்து அனுப்பி வைங்க...”
மிருதுளாவின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்கள் தோன்றின...!
“ஹப்பா, சந்தோஷத்தைப் பாரு, என்னே ஒரு நல்ல மருமகள் நீங்க...!”
“க்கும், உன்னை விட பரவாயில்லை! கார் எல்லாம் எடுத்துட்டு ஓடிப் போக மாட்டேன்...”
“பஸ்ல தான் போவீங்களோ????”
“உன்னை....”
இருவரின் பேச்சையும் தடை செய்வது போல, வெற்றியின் குரல் ஒலித்தது.
“மிருதுளா, டைம் ஆச்சு கிளம்புவோமா? இரண்டுப் பேரும் அப்புறம் ஃபோன்ல பேசிக்கோங்க...”
“சரிங்க...” என கணவனிடம் சொன்ன மிருதுளா, கிருத்திகா பக்கம் திரும்பி, “ஃபோன்ல பேச முடியும், இப்படி தலைல கொட்ட முடியுமா? என்ன பேச்சு பேசுற நீ...” என்று சொல்லிக் கொண்டே, கிருத்திகாவின் தலையில் ‘நச்’சென்று ஒரு கொட்டு வைத்தாள்!
“ஹலோ...!”
கிருத்திகா சுதாரித்து பேச தொடங்கிய நேரம், வெற்றியின் அருகே சென்று விட்டிருந்த மிருதுளா, கிருத்திகாவை பார்த்து கண் சிமிட்டி, அழகு காட்டி விட்டு காரில் ஏறினாள்!
அனைவரும் கை அசைத்து வழி அனுப்ப அந்த கார் சீறிப் பாய்ந்து கிளம்பிச் சென்றது!