பெரிய அனுகுண்டை அவள் போட்டு விட்டது போல பெரியவர்கள் நால்வரின் முகத்தில் கலவரம் தெரிந்தது. ஒவ்வொருவரும் மற்றவர் முகத்தை பார்த்துக் கொண்டார்கள்...
விஜய் தியாகுவின் பக்கம் பார்த்தான்!
தியாகு ஒரு ஓரமாக நின்று கிருத்திகாவையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்... அவன் முகத்தில் மீண்டும் உணர்ச்சிகளை துடைத்த பாவம் வந்திருந்தது! ஆனால் கிருத்திகா சொன்னது அவன் எதிர்பார்த்தது தான் என்பதை அவனின் ‘பாடி லேங்குவேஜ்’ சொன்னது!
‘இப்போது என்ன செய்து வைத்தான் இந்த துர்வாசன்!!’ என்ற கேள்வி விஜயின் மண்டையை குடைந்தது!
ஆனால், அவனை அப்புறம் தனியாக கவனித்துக் கேட்டுக் கொள்ளலாம் என்று மனதினுள் முடிவு செய்து விட்டு, தங்கையிடம் பேசினான் விஜய்.
“பிரின்சஸ்... எங்க எல்லோரையும் பத்தி தெரிஞ்சுக்க, பழசை ஞாபகத்துக்கு கொண்டு வர நீ வீட்டுக்கு வரேன்னு சொல்றேன்னு புரியுது... ஆனால்...”
விஜய் பேசி முடிக்கும் முன், “அப்படி இல்லைண்ணா...” என்று கிருத்திகா சொல்ல துவங்க, விஜய் அவசரமாக குறுக்கிட்டு,
“நீ வா, நாம தனியா பேசலாம்...” என்றான்!
அப்படியே, குழப்பத்துடன் நின்றிருந்த பெரியவர்களிடம்,
“நீங்க பேசிட்டு இருங்க... நான் பிரின்சஸ் கிட்ட பேசிட்டு சொல்றேன்...” என்றான்.
கிருத்திகாவின் கையைப் பற்றி விஜய் அழைத்து செல்வதை தியாகு அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்! நடப்பது எல்லாம் அவன் எதிர்பார்த்தது தான்! ஆனால், அவனின் கல்