மனமும் கூட உள்ளுக்குள் கலங்க தான் செய்தது! அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க முகத்தை கல் போல வைத்துக் மொண்டு நின்றிருந்தான்!
🌼🌸❀✿🌷
விஜய் கிருத்திகாவை காலியாக இருந்த அறைக்குள் அழைத்து வந்தான்!
“முதல்ல உட்காரு...” என சொல்லி அவளை குஷன் நாற்காலியில் அமர செய்தவன், அந்த நாற்காலிக்கு எதிரே இருந்த ஷோஃபாவில் அமர்ந்தான்.
“என்ன பிரின்சஸ், திடீர்னு எங்க கூட வரேன்னு சொல்ற?”
விஜயின் கேள்விக்கு பதில் சொல்ல கிருத்திகா வாயை திறந்த நேரம்,
“பிரின்சஸ், இரு இரு... எதுவா இருந்தாலும் கீதாவையும் கூப்பிடுறேன்... அப்புறம் சொல்லு...” என்று தங்கையிடம் சொல்லி விட்டு,
“கீதா... இங்கே வா...” என்று மனைவியை சத்தமாக அழைக்கவும் செய்தான்!
கிருத்திகா தலையில் அடித்துக் கொண்டாள்!
“கஷ்டம்!!!! ரொம்ப நல்ல அண்ணா நீ!!!”
“ஹி ஹி ஹி! சாரி பிரின்சஸ்... கீதா பக்கத்துல இருந்தா தான் எனக்கு எல்லா வேலையும் நடக்கும்...”
விஜய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கீதா அவர்கள் இருந்த அறைக்குள் வந்து கணவனின் அருகே அமர்ந்தாள்.
மனைவியை பார்த்து ஒரு க்ளோஸ்-அப் புன்னகை சிந்தி விட்டு,