”நோ நோ நான்தான் இந்த விசயத்தை மறந்துட்டேன், நேத்து டின்னர் முடிஞ்சதும் எனக்குள்ள நிறைய மாற்றம் வந்தது, அதுல நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டேன் சாரி மேம்“
“இட்ஸ் ஓகே தருண், புது ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சி, அடுத்து உங்களுக்கான ப்ராஜெக்ட் வந்த பின்னாடி நான் கூப்பிடறேன், அதுவரைக்கும் ரிலாக்ஸா இருங்க, உங்க டீம் ஆளுங்ககிட்ட கூட இதைப்பத்தி சொல்லிட்டேன், அவங்க ஏதோ டிரிப்புக்கு ஏற்பாடு செய்திருக்காங்களாம், நீங்க வேணா அவங்களோட போய் வாங்களேன், இன்னும் உங்களுக்கு பெட்டர் ப்லீங் கிடைக்கும்”
”இல்லை வேணாம் எனக்கு அதுல விருப்பம் இல்லை”
”கிடைக்கற லீவை பயன்படுத்திக்குங்க“
”இல்லை எனக்கு வேணாம்“
”ஓகே அப்படின்னா வேற வேலை வர்றவரைக்கும், நான் சொல்ற வேலையை செய்றீங்களா”
”கண்டிப்பா என்ன செய்யனும்”
”கம்பெனி விசயமா நான் 15 நாள் கழிச்சி லண்டன் போகப்போறேன், உங்களுக்கு விருப்பம் இருந்தா என்கூட வரலாம், இது கம்பெனி டிரிப்தான் நான் தனியா போறேன், துணைக்கு யாரை வேணும்னாலும் கூட்டிட்டு போகச் சொன்னாங்க, எனக்கு டக்குன்னு உங்க ஞாபகம்தான் வந்தது, என்ன சொல்றீங்க உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா வேணாம், நான் வேற யாரையாவது பார்க்கிறேன் இல்லைன்னாலும் நான் தனியாவே போய் வருவேன் எனக்கு பழக்கம்தான்”
”நோ நோ நானும் வரேன், நான் லண்டனை பார்த்ததில்லை எனக்கு ஆசையா இருக்கு“
”நாம ஒண்ணும் ஹனிமூனோ, டூரோ போகலை, வேலை விசயமா போறோம் அங்க வேலை