முடிஞ்சாலும் ஊரை சுத்தி பார்க்க முடியுமான்னு தெரியலை டவுட்தான்”
”பரவாயில்லை மேம் நான் ப்ளைட்ல கூட போனதில்லை, எனக்கு லண்டன் டிரிப் ஜாலியா இருக்கும், என்னோட கவலைகளையும் நான் மறப்பேனே”
”ஓகே இன்னிக்கே உங்களுடைய பாஸ்போர்ட் மத்த பேப்பர் எல்லாம் கொடுங்க நான் உங்களுக்கு லண்டன் போறதுக்கு பிளைட் டிக்கெட் புக் பண்றேன் என சொல்ல தருணும் ஹரிணி கேட்ட அனைத்து தகவல்களையும் தர அவளும் தருணுக்கும் சேர்த்து லண்டனுக்கு ரிட்டர்ன் டிக்கெட்டுடன் சேர்த்து புக் செய்தாள். லண்டன் செல்லும் வரை தருணும் தினந்தோறும் ஆபிசிற்கு வந்து அங்கு வேலை செய்யும் மற்றவர்களுக்கு சிறுசிறு உதவிகள் செய்து என கம்பெனியில் வேலை செய்யும் அனைவரையும் தன்னுடைய நண்பர்களாக்கி கொண்டான். 14 நாட்கள் கழித்து ஹரிணி தருணை அழைத்து நாளைக்கு காலையில 4 மணிக்கு ரெடியாயிடுங்க வண்டி வரும் அதுல ஏறி ஏர்போர்ட்டுக்கு வந்துடுங்க “
”ஓகே ஹரிணி சாரி சாரி ஓகே மேம்”
”அடிக்கடி மறந்துடறீங்க அது உங்களுக்கே ஆபத்தா முடியப்போகுது”
”அப்படி ஏதும் ஆகாது இனி நான் எல்லாத்தையும் ஞாபகம் வைச்சிக்கிறேன்”
”ஓகே நீங்க போகலாம், நான் லண்டன் போறதுக்கு தேவையானதை பேக் செய்யனும்” என ஹரிணி சொல்ல தருணும் மகிழ்ச்சியாக தனது கேபினுக்குச் சென்றான்.
லண்டன் செல்வது அவனுக்கு உண்மையில் பெரிய லாட்டரி அடித்தது போலதான் அதுவும் ஹரிணியுடன் செல்வது அவனுக்கு குதூகலமாக இருந்தது, அவளுடன் லண்டனை சுற்றி பார்க்க இயலாமல் போனால் என்ன, முடிந்தவரை அவளுடன் இருக்க வாய்ப்பு கிடைத்ததே அதுவே போதும் என நினைத்தான், அவள் பேசியவற்றை நினைவு கூர்ந்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டான், ஹனிமூன் என அவள் எதேச்சையாக சொன்னது அவனுக்குள் கிளர்ச்சியை உண்டுபண்ணியது, எதை எதையோ நினைத்தபடி நேரத்தைத் தள்ளியவன் மறுநாள் ஹரிணி சொன்னது போலவே ரெடியாக காத்திருந்தான், வீட்டிலும் வேலை