(Reading time: 26 - 52 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”பர்ஸ்ட் டைம் இங்க வரேன் அதான்“

  

”ஓ இது என்னோட 3 டிரிப்”

  

”அப்படியா முதல் டிரிப் எப்போ எதுக்காக போன ஹரிணி”

  

”எனக்கும் இளங்கோவுக்கும் கல்யாணம் ஆகி ஹனிமூனுக்காக நாங்க லண்டன் போனோம், அது என்னோட பர்ஸ்ட் டிரிப் அடுத்து இளங்கோவோட மரணத்தப்ப நான் வேலை விசயமா லண்டன் போனேன், அது என்னோட இரண்டாவது டிரிப் இப்ப உங்களோட நான் லண்டன் போறேன்”

  

”ஓ அப்படியா”

  

”ஆமாம் இளங்கோ சாகறப்ப நான் அவன்கூட இல்லை லண்டன்ல இருந்தேன், அங்க இருந்து என்னை உடனே அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க, வேலை முடியற வரைக்கும் இருந்து அவசர அவசரமா இளங்கோவை பார்க்க போனேன் ஆனா, பிரயோசனம் இல்லை, நான் வர்றதுக்குள்ள அவனை எரிச்சிட்டாங்க, அவன் முகத்தை கூட கடைசியா என்னால பார்க்க முடியலை, இப்ப நினைச்சா கூட அழுகையா வருது தருண்” என சொல்லி அவள் கண்கள் கலங்க ஆறுதலுக்காக அவளின் தோளை பற்றினாள் தருண்

  

”கமான் கலங்காத இது ஏர்போர்ட், யாராவது தப்பா நினைப்பாங்க ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப்” என சொல்ல ஹரிணியும் தனது அழுகையை நிப்பாட்டி தன்னை இயல்பாக்கிக் கொண்டாள்.

  

இருவரும் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்து செக்கிங் அனைத்தும் முடித்துக் கொண்டு பிளைட்டிலும் ஏறினார்கள். இருவருக்கும் பக்கம் பக்கம் சீட் இருக்கும் என எதிர்பார்த்த தருணுக்கு ஏமாற்றமே, ஹரிணி அவளுக்கென ஒரு சீட் தருணுக்கு என தனியாக
வேறு ஒரு இடத்தில் சீட் என ஏற்பாடு செய்திருந்தாள் அந்த சின்ன ஏமாற்றத்தைக்கூட தருணால் தாங்க இயலவில்லை

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.