கண்ணீர் முத்துக்கள் இருந்தது, அதை வைத்தே புரிந்துக் கொண்டான் அவள் இளங்கோவின் நினைவில் இருக்கிறாள் என்று உடனே அவளுக்கு பக்கத்தில் இருந்தவரிடம் கைகூப்பி கெஞ்சி எழுப்பிவிட்டு இவன் அமர்ந்தான்.
தருண் வந்ததை கூட அறியாத ஹரிணி இளங்கோவை நினைத்துக் கொண்டிருக்க திடீரென அவளின் கரத்தை யாரோ பற்றுவது போன்ற உணர்வு சட்டென கண்கள் திறந்துப் பார்த்து தருண் தன்னுடைய பக்கத்து இருக்கையில் இருப்பதை அறிந்து அதிர்ந்தாள்
”தருண் நீங்க எப்படி இங்க” என மெதுவாக கேட்க அதற்கு அவனோ
”முதல்ல உன் கண்ணீரை துடை ஹரிணி, ப்ளீஸ் இப்படி உன்னை பார்க்க கஷ்டமாயிருக்கு” என சொல்ல அவளோ அவசர அவசரமாக தனது கண்ணீரை துடைத்துவிட்டாள்
”இதுக்காகதான் இந்த போட்டோவை கொண்டு வந்தியா ஹரிணி” என சொல்லிக் கொண்டே அவளிடம் இருந்து இளங்கோவின் போட்டோவை கையில் எடுத்தான்
”இளங்கோ என்னோட ஹஸ்பெண்ட் மட்டுமில்லை லவ்வர், வெல்விஷர், ப்ரெண்ட், அப்பா, அம்மா எல்லாமே அவன்தான் என்னால அவனை மறக்க முடியலை தருண், இப்படி அவன் போட்டோவை வைச்சிக்கிட்டா கொஞ்சம் ஆறுதலா இருக்கு“
”சாரி ஹரிணி நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காத”
”ஓ கமான் தருண் நீ என்ன சொன்னாலும் நான் தப்பாவே நினைக்க மாட்டேன்”
”நீ இப்படியே இளங்கோவையே நினைச்சிக்கிட்டு இருந்தா உன் வாழ்க்கையில சந்தோஷம்ங்கற விசயமே காணாம போயிடும்“
”ஐ நோ பட்” என இழுத்தாள்
”கமான் ஹரிணி, மூவ் ஆன் இன்னும் பழைய விசயத்தை நினைச்சிக்கிட்டு இருக்காத, இதனால உன் மனசும் பாதிக்கும், உடம்பும் பாதிக்கும், ரிலாக்ஸா இரு”