ஆனால் தனது கடுப்பை வெளிக்காட்டாமல் புன்னகையுடன்
”நான் பிரெஷாயிட்டு வரேன்” என சொல்லிவிட்டுச் சென்றான்.
அவன் வருவதற்குள் சாப்பிடுவதற்கு உணவுகளை வரவழைத்திருந்தாள் ஹரிணி.
தருண் வரவும் இருவருமாக கலகலவென பேசி சிரித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தார்கள். அடுத்து ஒரே ஒரு படுக்கை அதில் எப்படி இருவரும் என இருவருமே ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்க்க அவளிடம் நல்ல பேர் எடுப்பதற்காகவே தருண் அங்கிருந்த சோபாவில் படுத்துக் கொண்டான்
”சாரி தருண் எனக்கு கஷ்டமாயிருக்கு நான் வேணா உனக்கு இன்னொரு ரூம் ஏற்பாடு செய்யட்டுமா”
”எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஹரிணி, எனக்கு இந்த சோபாவே ஓகேதான் அப்புறம் ப்ளைட்ல வந்தது அசதியா இருக்கு நான் ரெஸ்ட் எடுக்கறேன்”
”ஓ தாராளமா நானும் கெஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்” என சொல்லிய ஹரிணி படுக்கையில் படுத்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து தருண் சோபாவை விட்டு எழுந்து வந்து ஹரிணியை நோட்டமிட்டான், அவளோ நிம்மதியாக உறங்குவதைக் கண்டு அவளின் பக்கத்தில் படுத்துக் கொண்டு உறங்கலானான்
வெகு நேரம் கழித்து விழிப்பு வரவும் கண் திறந்த ஹரிணிக்கு திக்கென்றது, அவளுக்கு பக்கத்தில் தருண் உறங்கிக் கொண்டிருக்க அதிர்ச்சியில் எழுந்தாள், அவளின் அதிர்வால் தருணுக்கும் விழிப்பு வந்தது அவனும் எழுந்தான்
”தருண் நீங்க எப்படி பெட்டுக்கு வந்தீங்க“
”அதானே எப்படி வந்தேன் ஓ சாரி சாரி தூக்க கலக்கத்தில பெட்ல வந்து படுத்திருப்பேன் எனக்கு சோபாவில படுத்து பழக்கமில்லை, அதான் சாரி ஹரிணி நான் வேணும்னே செய்யலை”