(Reading time: 26 - 52 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”ஓ சாரி சாரி தருண் சே எல்லாம் என் தப்புதான்” என அவனை எழுப்பி சோபாவில் உட்கார வைத்தாள்

  

”இந்த குளிர்ல எப்படி உன்னால வெறும் தரையில படுத்து தூங்கமுடிஞ்சது“

  

”என்ன செய்றது உனக்கு துணையா வந்தேன், பாதுகாப்புதர்றதுதான் என் வேலையே தவிர உன்னை கஷ்டப்படுத்தக்கூடாது பாரு”

  

”போதும் தருண் நான் உன்னை நம்பறேன், நீ தரையில எல்லாம் படுத்துக்க வேணாம் இங்க பெட்லயே படுத்துக்க எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை“ என அவள் படபடவென பேசவும் தருண் முகம் மலர்ந்தான்

  

”கம்பெனி விசயமா வந்தோமே அந்த வேலையை பார்க்கப் போகலையா”

  

”இதோ ரெடியாகி கிளம்பறேன் நீயும் வர்றியா”

  

”இல்லை வெளிய படுத்திருந்தது ஒரு மாதிரியா இருக்கு, நான் ரெஸ்ட் எடுக்கறேன்“

  

”ஓகே தருண் பெரிசா மீட்டிங்ல விசயம் எதுவும் இருக்காது, வெறும் அறிமுகம்தான் இருக்கும், அதனால நாளைக்கு உன்னை நான் கூட்டிட்டுப் போறேன் டேக்கேர்” என சொல்லிவிட்டு ஹரிணி அவசர கதியில் ரெடியாகி கிளம்பினாள்.

  

அவள் சென்றபின்பு தருண் அவளை நினைத்து பல திட்டங்களைத் தீட்டலானான்.

  

மாலை நேரம் மீட்டிங் முடிந்து களைப்பாக வந்திறங்கினாள் ஹரிணி அவளை வரவேற்க ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்திருந்தான் தருண். அதில் அவள் பரவசமானாள்.

  

”வாவ் தருண் அசத்தலா இருக்கே எல்லாம்“

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.