”என்னோட பிறந்த நாள்”
”வாவ்வ் தருண் எனக்கு இது தெரியாது சாரி மெனிமோர் ஹாப்பி ரிட்டர்னஸ் ஆப்தடே”
”தாங்ஸ்”
”உன் பிறந்த நாளுக்கு நான் எந்த பரிசும் தரலையே, முன்னாடியே தெரிஞ்சிருந்தா நிச்சயம் ஏதாவது வாங்கியிருப்பேன்”
”நோ ப்ராபளம் இதை போட்டு காட்டு, இதுவே நீ எனக்கு தர்ற பரிசு, நான் கீழே உனக்காக காத்திருப்பேன் வந்துடு” என சொல்லிவிட்டு தருண் சென்றுவிட ஹரிணி அந்த உடையை கண்டு மெய்சிலிர்த்தாள்.
தருணோ அரை மணி நேரம் காத்திருந்தான், ஒரே பதட்டம் ஹரிணி அந்த உடையில் வந்தால் மேற்கொண்டு உறவை பலப்படுத்தலாம் இல்லையென்றால் என்ன செய்வது என பலவிதமாக யோசித்தான் ஆனால் ஹரிணியோ அவன் தந்த உடையை அணிந்துக் கொண்டு இளவரசி போல அவன் முன் வந்து நின்றாள், அவளை அப்படி காணவும் மகிழ்ந்து அவளை அணைக்க வர அதைத் தடுத்தாள் ஹரிணி
”ஊப்ஸ் சாரி சாரி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்”
”பரவாயில்லை இந்த ட்ரஸ்ல நான் இளவரசி போலவே இருக்கேன்”
”நீ இளவரசிதான் அதுல என்ன சந்தேகம் வா ஒரு வாக் போலாம்” என சொல்லி கையை நீட்ட அவளோ சிரிப்புடன் அவனது கையை பற்றிக் கொள்ளாமல் நடக்க அவனுக்கு அது ஏமாற்றமாக இருந்தது, இருவரும் எதை எதையோ பேசிக் கொண்டே வந்தார்கள் அந்தச் சமயம் தருண் வாய் தவறி நிவேதினி என சொன்னான்
”நிவேதினி கூட இப்படித்தான் ரொம்ப மாடர்ன் டைப், அவள் பேச்சு கூட மாடர்னாதான்