இருக்கும், அவள் ஒரு தேவதை, அவள் வந்த பின்னாடி என் வாழ்க்கையே பிரகாசமாச்சி, ரொம்ப லக்கியானவ அவளால எனக்கும் லக் வந்தது” என சொல்லிக் கொண்டிருக்க ஹரிணி குழம்பி
”யாரு நிவேதினி” என கேட்டதும் தருண் தடுமாறினான்
”அது வந்து“
”உங்க மனைவி பேரு பவானிதானே, இந்த நிவேதினி யாரு பிரெண்டா” என கேட்க தருணோ நொந்துப் போனான்
”சாரி ஹரிணி உன்கிட்ட இன்னொரு விசயம் சொல்லனும் ஆக்சுவலா இதைதான் நான் முன்னாடியே சொல்லியிருக்கனும் பட் தேவையில்லன்னு நினைச்சேன்“
”என்ன விசயம் என்கிட்ட சொல்லக்கூடாத விசயம்னா வேண்டாம் நோ ப்ராப்ளம் உங்க பர்சனல் உங்களோட“
”நோ நோ அப்படி ஏன் பிரிச்சி பேசற பர்சனல்னு இல்லை ஆக்சுவலா நிவேதினி என்னோட காதல் மனைவி”
”வாட்” என அதிர்ச்சியில் அலறினாள் ஹரிணி
”ஆமாம்”
”அப்ப பவானி”
”அவள் அடுத்து வந்தவ”
”புரியலையே”
”நான் காலேஜ் படிக்கறப்ப நிவேதினியை லவ் பண்ணேன், இரண்டு பேரும் படிப்பு முடிஞ்ச