”குழந்தைங்க“
”இல்லை ஆண்டவன் எங்களுக்கு அந்த வரத்தை தரலை”
”உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு”
”நீ பாவப்படறதுக்காக நான் இதை சொல்லலை, என் மனசுல ரொம்ப நாளா தேக்கி வைச்ச விசயம் இது, உன்கிட்ட ஷேர் பண்ணா மனசு லேசாகும்னு நினைச்சி சொன்னேன் அவ்ளோதான்”
”புரியுது தருண், நிவேதினி, பவானி இவங்களோட வாழ்ந்த வாழ்க்கையை உங்களால மறக்க முடியலை, பேசாம நீங்க இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டா என்ன”
”எதுக்கு ரிஸ்க் ஏற்கனவே ரெண்டு பேர் என் வாழ்க்கையை புரட்டி போட்டது பத்தாதா”
”நான் அப்படி சொல்லலை, உங்க வாழ்க்கையில ஒரு மாற்றம் கிடைக்குமே, இப்படியே நீங்களும் தனியா எத்தனை நாள் இருப்பீங்க“
”இதைத்தான் என் வீட்லயும் சொல்றாங்க”
”அப்புறம் என்ன இன்னொரு கல்யாணம் செய்துக்கறது“
”இதே கேள்வியை உன்கிட்ட நான் கேட்டா உன் பதில் என்ன ஹரிணி“
”என்ன“
”நீயும் இளங்கோவை மறந்துட்டு மறுமணம் செய்துக்கலாமே”
”நோ என்னால முடியாது இளங்கோவை என்னால மறக்க முடியாது, அப்படியே மறந்தாலும் அதுக்காக என்னால இன்னொரு கல்யாணம் செய்துக்க முடியாது”