கேட்டும் தெரிஞ்சுக்கிட்டேன்...”
“ம்ம்ம்...”
“ஹாஸ்பிட்டல் ஃபோன் செய்தேன் இன்னைக்கு ஏழு மணிக்கு மேல வந்து ரிப்போர்ட் வாங்கிக்க சொன்னாங்க... உங்களுக்கு அதுல என்ன இருக்குன்னு தெரியுமா ஆனந்த்? சொல்லுங்க... ப்ளீஸ்...”
“சொல்றேன்... வா உட்கார்ந்து பேசலாம்...”
“நீங்க முதல்ல சொல்லுங்களேன்...”
“சொல்றேன்டா ரதி... முதல்ல இதை தெரிஞ்சுக்கோ, நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்லை...”
“நிஜமா தானே சொல்றீங்க?”
“சத்தியமா சொல்றேன்...” என்ற விவேக், பாரதியை மென்மையாக அணைத்தப்படியே, அவளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான். அந்த ரூமில் இருந்த கட்டிலில் அமர்ந்தவன், பாரதியையும் தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.
“உன் கிட்ட நிறைய விஷயம் சொல்லனும் ரதி...” என்று தொடங்கி, பவித்ரா வீட்டில் பாரதியை விட்டுவிட்டு தனியாக டாக்டர் தாமஸிடம் ரிப்போர்ட் வாங்க அவன் சென்றதையும், அங்கே டாக்டர் சொன்னதையும் சொன்னான். பாரதி பயந்துப் போனாள்!!!
“என்ன சொல்றீங்க விவேக்... உங்களுக்கு என்ன? இப்போ தானே எதுவும் இல்லைன்னு சொன்னீங்க? வாங்க டாக்டர் கிட்ட போகலாம்...”
“ரதி கண்ணா ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளு... எனக்கு ஒன்னுமில்லை...”
“இப்போ தானே டாக்டர் சொன்னதை...” வாக்கியத்தை முடிக்கவும் முடியாமல் பாரதிக்கு அழுகை வந்தது. அவளின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு நீர் வரவும், விவேக்