“ம்ம்ம்... பார்த்தேன்... அதுதல பார்த்து ரசிக்க என்ன இருக்கு?” என்றான் விவேக் கசப்புடன்.
அவனை ஒரு பார்வை பார்த்த லாவண்யா, முழு விபரம் தெரியாமல் அவனுக்கு வீண் நம்பிக்கை கொடுப்பது சரி இல்லை என்பதை உணர்ந்தவளாக,
“இந்த ஃபைல் உன்னோடது இல்லைன்னு தோணுது விவேக்...” என்றாள் அமைதியாக!
“என்ன சொல்ற லாவி? இந்த ரிசல்ட் என்னுடையது இல்லையா?” விவேக் அதிர்ச்சியுடன் சாலையில் இருந்து பார்வையை திருப்பி தோழியைப் பார்த்தான்!
ஆம் என தலை அசைத்த லாவண்யா, “நீ இந்த ஃபைல் உள்ளே இருக்கதை தான் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்... இந்த ப்ரோஃபைல் பேஜ்ல பாரு... பேர் விவேக் குமார்னு இருக்கு...”
“ஒருவேளை அது மட்டும் தப்பா இருக்கலாமே...” என்றான் விவேக் நம்பிக்கை இல்லாமல்...
“ம்ம்ம்... இருக்கலாம்... இங்கே இருக்கும் டீடெயில்ஸ் எல்லாமே தப்பு... வயசு 28ன்னு இருக்கு... ஹைட், வெயிட் எல்லாமே தப்பா இருக்கு...”
“ப்ச்... எனக்கு என்னவோ ப்ரோஃபைல் பேஜை தப்பா வச்சிருப்பாங்கன்னு தோணுது லாவி...”
“சரி, இன்னைக்கு திரும்ப எல்லா டெஸ்ட்டும் செய்ய சொல்லலாம்... இந்த ரிசல்ட் பார்த்தா தெரிஞ்சிடும் தானே?”
“ம்ம்ம்...”
“இங்கே பார் விவேக், நம்பிக்கை தான் வாழ்க்கை, திரும்ப டெஸ்ட் செய்றதுல தப்பில்லையே...”
“ப்ச்... எதுவுமே இப்போ தப்பில்லை தான்...”