(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பதறினான்.

  

என்ன கண்ணா இது, நான் தான் எதுவுமில்லைன்னு சொல்றேன்ல?” என்றபடி பாரதியின் கண்ணீரை துடைத்தான்.

  

நிஜமா தானே சொல்றீங்க? ஆனால்...”

  

அவசரப்படாதே ரதி, நான் சொல்றதை பொறுமையா கேள்... அதுக்கு முன்னாடி இதை மனசுல வச்சுக்கோ... எனக்கு எதுவுமில்லை...”

  

பாரதி நம்பிக்கை இல்லாது அவனைப் பார்த்தாள்! அவளின் கண்களில் தெரிந்த கவலையும் பதற்றமும் மனதை வருத்த,

  

நிஜம் கண்ணா... முழு விஷயத்தையும் கேளு... நானும் அன்னைக்கு அந்த டாக்டர் சொன்னதைக் கேட்டு ஆடிப் போயிட்டேன்... உன் கிட்டேயும், எல்லோர் கிட்டேயும் எப்படி சொல்றதுன்னே புரியலை...” என்று தொடங்கி, அவன் மனதில் இருந்த குழப்பங்கள், போராட்டங்கள், அவன் எடுத்த முடிவுகள்... போட்ட திட்டம் என்று எதையும் மறைக்காமல் சொன்னான் விவேக்!

  

இன்னைக்கு காலையில லாவண்யா என் மெடிகல் ஃபைல் பார்த்து நீ என்ன லூசாடான்னு கேட்டப்போ கூட நான் பெரிசா எதையும் எதிர்பார்க்கலை...” என்றபடி காலையில் இருந்து நடந்ததை மனைவியிடம் விவரிக்க தொடங்கினான்.

  

🌼🌸❀✿🌷

   

நீ என்ன லூசாடா விவேக்,” என்ற லாவண்யாவை கேள்வியுடன் பார்த்தான் விவேக்.

  

என்ன விஷயம் லாவி?”

  

இந்த ஃபைலை ஒரு தடவையாவது திறந்துப் பார்த்தீயா?”

  

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.