”சரி சொல்லும்மா யார் நீ” என விசாரிக்கலானான் அர்ஜூன்
”நான் நந்தினி”
”அதான் வெளியவே சொல்லிட்டியே வேற ஏதாவது சொல்லு”
”வேற என்ன சொல்லனும்”
”இங்க எதுக்கு வந்த”
”லெட்டர்ல அட்ரஸ் இருந்தது அதான் வந்தேன்”
”லெட்டரா என்ன லெட்டர் காட்டு” என அர்ஜூன் கேட்கவும் அவள் தன் கை பையில் இருந்த ஒரு லெட்டரை எடுத்துக்காட்ட அதை வாங்கிய அர்ஜூன் ரிஷியிடம் கொடுத்து தானும் படிக்கலானான்.
”அன்புள்ள நந்தினிக்கு
நான் உன் மாமா ராஜகோபால் எழுதுவது. இந்த கடிதம் கிடைத்ததும் நீ நேராக சென்னை வந்து என் மகனை பார் அவன் உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்வான். எனக்கு வேறு வேலையிருப்பதால் நான் இருக்கமாட்டேன். அவன் உனக்கு அத்தான் முறை வேண்டும் என்பதால் கூச்சப்படாமல் அவனிடம் உதவி கேள். கீழே வீட்டு முகவரி எழுதியுள்ளேன் முகவரியிருக்கும் இடத்திற்கு வந்துவிடு
இப்படிக்கு
ராஜகோபால்
என அதில் முகவரியும் எழுதப்பட்டிருந்தது. அர்ஜூன் உடனே ரிஷியிடம்