”இதப்பாரு தங்கச்சி நீ சொல்றதும் சரிதான் ஆனா அட்ரஸ் மாறி வந்திருக்கம்மா” என பாசமாக கூறவும் அவள் அதிர்ச்சியுடன் இருவரையும் பார்த்தாள்
ரிஷியே அவளை சமாதானப்படுத்தினான்.
”நந்தினி டென்ஷன் ஆகாத சென்னையில ஓட்டல் பிசனஸ்னா ஈசியா கண்டுபிடிச்சிடலாம். உன் மாமா யாரு என்னன்னு விசாரிக்கிறேன் சரியா அதுவரைக்கும் இங்க தங்கியிருப்பியா” என அவளை சந்தேகத்துடன் கேட்க அவளும் வேறு வழி தோன்றாமல்
”சரிங்கத்தான்” என்றாள்.
அவனும் ஒரு திருப்தியுடன்
அர்ஜூனை பார்த்த ரிஷி
”அர்ஜூன் கிளம்பு ராஜகோபால்ங்கறவரு எங்க ஓட்டலை நடத்தறார்னு விசாரி” என கூறவும் அர்ஜூனும் எழுந்தான்
”அண்ணா நான் இப்பவே போய் பார்க்கறேன் தங்கச்சி நான் வர்ற வரைக்கும் நீ பத்திரமா இங்கயே இருக்கலாம் ரிஷி அண்ணா ரொம்ப நல்லவரு உனக்கு ஏதாவதுன்னா அவரிடம் கேளு” என கூறவும் அவளும் அவனை பார்த்து
”அத்தான் ரொம்ப பசிக்குது அத்தான்” என்றாள் தயங்கி தயங்கி அவள் அவ்வாறு சொல்லவும் இரு ஆண்களுக்கும் இரக்கம் வந்தது
”ஏம்மா தங்கச்சி ஏன் இன்னும் சாப்பிடல”
”இல்லண்ணா அது பாட்டி சுகமில்லாம இருந்ததால கையில இருந்த காசை செலவழிச்சேன் ஆனாலும் அவங்க இறந்துட்டாங்க வீட்டை வித்திட்டதால என்கிட்ட சுத்தமா பணமில்லை