”என்னது அவளை எதுக்கு உங்க ரூமிக்கு கூட்டிட்டு போனீங்க நம்ம வீட்லதான் கெஸ்ட் ரூம் எத்தனை கிடக்குது அதுல தங்க வைக்க வேண்டியது தானே” என அவன் அதிர்ச்சியாக கூற அப்போதுதான் ரிஷிக்கு புரிந்தது
”அது எனக்கு தோனலையே சரி விடு நான் போய் கெஸ்ட் ரூம்ல குளிச்சிட்டு வரேன்”
”குளிச்சிட்டு மாத்து துணிக்கு எங்க போவீங்க”
”ஆமா சரி இரு நான் போய் ரூம்ல இருந்து துணி எடுத்துட்டு வரேன்”
”அங்கதான் நந்தினி இருக்காளே”
”ஆமா இன்னுமா அவள் குளிக்கறா நான் போய் பார்க்கறேன்”
”அண்ணா” என அவன் கத்தவும்
”டேய் தப்பா நினைக்காதடா குளிச்சிட்டாளான்னு வெளியவே நின்னு பார்க்கறேன்” என அவன் கூறவும் அர்ஜூனுக்கு பெருமூச்சு வந்தது.
”சரி சரி என்னை கேள்வி கேட்காம போ போய் நீயும் குளிச்சிட்டு வா ஹார்பர்ல இருந்து வந்துட்டு ஒரே மீன் நாத்தம்”
”ஆ அப்படியா என் மேல மீன் நாத்தம் வீசுது உங்க மேல என்ன பன்னீர் நாத்தமா வீசுது போங்கண்ணா இன்னிக்கு நீங்க என்னமோ சரியில்லை மழையில நனைஞ்ச நண்டு மாதிரியிருக்கீங்க”
”டேய் நீ போடா” என அவனை துரத்தவும் அர்ஜூன் அவனுக்கான அறைக்கு சென்றான். ரிஷியோ அவன் ருமின் வாசலில் நின்று கொண்டு கதவை தட்டினான்.