சத்தம் கேட்டு சிறிது விநாடிகளில் கதவை திறந்தாள் நந்தினி. குளித்து முடித்து புது பாவாடை தாவணியில் சற்று அலங்காரத்துடன் அவள் மிகவும் அழகாக தெரிந்தாள் அவனை பார்த்ததும் அவள் சிரித்தாள்.
”என்ன அத்தான்”
”நந்தினி இது என்னோட ரூம் என் துணி உள்ள இருக்கு எனக்கு வேணும்” என அவன் கூறவும் சற்று கலவரமடைந்தாள் நந்தினி
”அத்தான் இது உங்க ரூமா சாரி எனக்கு தெரியாது இருங்க நான் இப்பவே காலி பண்ணிடறேன்”
என கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள். அவள் உள்ளே செல்லவும் இவனும் உள்ளே சென்றான் அவள் வேகமாக தன் லக்கேஜ்களை சரிசெய்து விட்டு நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
”அத்தான் நான் வெளிய இருக்கேன்” என சொல்லிவிட்டு வெளியே சென்றாள். அவள் சென்றதையும் அவள் அணிந்திருந்த நீலவண்ண உடையையும் மறக்காமல் கவனித்தவன் கதவை தாளிட்டு விட்டு அலமாரியில் நீல உடையை தேடிப்பிடித்து எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான். வெளியே வந்த நந்தினியோ தன் லக்கேஜ்களை ஹாலில் ஓரிடத்தில் வைத்துவிட்டு அந்த வீட்டை சுற்றி முற்றி பார்த்தாள்.
அந்த வீட்டின் சுவர்களுக்கு கடல் நீல நிறத்தில் பெயின்ட் அடித்திருந்தான். டால்பின், கோல்டன் பிஷ், பென்குயின் போன்ற அதீத அபூர்வ மீன்களின் படங்களை சுவற்றில் மாட்டியிருந்தான். மீன்களின் படங்களை தவிர வேறு எந்த படங்களும் எங்குமில்லை. டேபிள் மீதும் டைனிங் டேபிள் மீதும் மீன் போன்ற அமைப்புடைய கைவினைப்பொருட்களை அழகாக அடுக்கியிருந்தான்.
ஷாண்டலியர் கூட டால்பீன் போன்ற உருவத்துடன் வடிவமைக்கப்பட்டு பார்ப்பதற்கு வித்தியாசமாக அழகாக இருந்தது. சுவற்றில் ஆங்காங்கு உள்ள தூண்களிலும் விளக்குள் பொருத்தப்பட்டு இருந்தது அதுகூட பார்ப்பதற்கு கோல்டன் பிஷ் வாயில் பல்ப் எரிவது போல்