(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

என்னாச்சி உனக்குஎன அவளை பார்த்து கேட்கவும்

  

ஒண்ணுமில்லை அத்தான்" என அவள் வெட்கத்தில் சிரித்துவிட்டு அங்கிருந்து வெளியே ஓடிவிட்டாள். அவனை சமையல்காரன் ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சிரிக்கவும் அவனும் பதிலுக்கு சிரித்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான். அவள் தயாராக டைனிங் ஹாலில் அமர்ந்திருக்கவும் அவனும் அவள் பக்கத்து சீட்டில் அமர்ந்தான். சமையல்காரன் வந்து அவர்களுக்கு பரிமாறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

  

அவள் சாப்பிட எண்ணி கை வைக்கும் போது ரிஷி எதையோ கவனித்து உடனே அவளிடம் கத்தினான்

  

உன் கையில அடிப்பட்டிருக்கே என்னாச்சி

  

என கேட்க அவள் கையை திருப்பினாள் உள்ளங்கையில் ஆழமான காயம் பட்டிருக்க அவள் சோகமாக அவனை பார்த்து

  

அத்தான் இது ட்ரெயின்ல ஏறும் போது இரும்பு கிழிச்சிடுச்சி காசு இல்லாததால மருந்து போடல மஞ்சள் பூசிவிட்டேன் இப்ப காய்ஞ்சிடுச்சிஎன அவள் கூறவும் அவன் அவளது கையை தொட்டு அந்த காயத்தை ஆராய்ச்சி செய்தான்.

  

காயம் இன்னும் ஆறவில்லை அவன் அவளிடம்

  

நந்தினி இரும்பு கிழிச்சிருக்குன்னு சொல்ற செப்டிக் ஆனா என்ன செய்வ சொல்லு முதல்ல எப்படி சாப்பிடுவ காரம் பட்டா எரியாதா உனக்குஎன கேட்க அவளும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனை பார்க்கவும்

  

சரி சரி திரும்பு காயம் ஆரும் வரைக்கும் நான் ஊட்டிவிடறேன் அதுக்கப்புறம் நீயேதான் சாப்பிடனும் சரியாஎன சொல்லிவிட்டு அவளுக்கு ஊட்டலானான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.