குளித்து ரெடியாகி வந்த அர்ஜூன் இந்த அற்புத காட்சியை கண்டதும் ஷாக் அடித்தது போல நின்றுவிட்டான்.
நேராக ரிஷியிடம் வந்தவன்
”அண்ணா என்ன பண்றீங்க” என கத்த
”எதுக்குடா இப்படி ஷாக் ஆகற பாவம் நந்தினி கையில அடிப்பட்டிருக்கு அதான் உதவி செஞ்சேன்”
”அதுக்கு எதுக்கு நீங்க ஊட்டனும் கையிலதானே அடிப்பட்டிருக்கு ஸ்பூன் கொடுத்திருந்தா சாப்பிட போறா” என அவன் கூறவும் தான் அவனுக்கு புரிய அவன் அவளை பார்க்க அவளும் சிரித்துவிட்டு
”அத்தான் அண்ணா சொல்றது சரிதான் நான் ஸ்பூன்லயே சாப்பிடறேன்” என சொல்லிவிட்டு திரும்ப எத்தனிக்கையில்
”சரி சரி தாராளமா சாப்பிடு ஆனா இப்படி பாதியில விட்டா மிச்சத்தை நான் எப்படி சாப்பிடறது பரவாயில்ல நீ வாயை திற நான் இப்ப மட்டும் ஊட்டிடறேன் அடுத்த வேளைக்கு நீ ஸ்பூன்ல தான் சாப்பிடனும்” என கூறிவிட்டு ஊட்டிவிட்டான்.
அர்ஜூனிற்கோ மனதில் அபாய சங்கே ஊதியது போல் உணர்ந்தான்
”இந்த பொண்ணு யார்னே தெரியல இன்னும் கொஞ்ச நேரத்தில அதோட சொந்த மாமா கிட்ட போயிட போகுது அது தெரியாம அண்ணன் இப்படி பாசம் காட்டறாரே அவள் போன பின்னாடி என்ன செய்வாரு இவரு” என யோசித்துக்கொண்டே அவனும் சாப்பிட்டு எழுந்தான். ரிஷியும் அவளுக்கு ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டு எழுந்தான்.
ஹாலுக்கு வந்து நின்ற அர்ஜூன் ரிஷியிடம்