(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”ஆனா உனக்கு தெரியாதா எந்த மாதிரி சூழ்நிலையில இந்த கல்யாணம் நடந்ததுன்னு எப்படி என்னால ஹனிமூனுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சிங்கறதுக்காக நிவேதினியை மறந்துட்டு எப்படி இன்னொரு பொண்ணை தொட முடியும் என்னால முடியாது“

  

”நான் வேற யாரோ கிடையாது நீங்க தொட்டு தாலி கட்டின மனைவி, என்னை தொட உங்களுக்கு உரிமையிருக்கு”

  

”உரிமையிருக்கு ஆனா, விருப்பம் இல்லையே இந்த ஹனிமூன் எனக்கு வேணாம் சாரி பவானி” என சொல்லி முடிக்க பவானியின் கண்கள் கலங்கிவிட்டது, அவளுக்கு இது முதல் கல்யாணம் முதல் ஹனிமூன் வரை ஏகப்பட்ட ஆசைகள் ஏகப்பட்ட கற்பனைகளுடன் இருந்தவளுக்கு தருணின் பேச்சு ஏமாற்றத்தை தந்தது.

  

பவானியும் நொந்தபடியே சரியென தலையாட்ட தருண் மென்மையாக சிரித்தான், அவன் சிரித்தானே என்பதற்காக அவனை நெருங்கி அணைக்க முற்பட அதைத் தடுத்தான் தருண்

  

”என்ன செய்ற, என்னை இவ்ளோ சீப்பானவனா நினைக்காத என்னதான் நான் உன்னை கல்யாணம் செய்தாலும் என் மனசு இதுக்கெல்லாம் இடம் கொடுக்கலை, கொஞ்ச நாள் பொறுத்துக்க தன்னால என் மனசு மாறும் அதுக்கு அப்புறம் நானே உன்னைத் தேடி வருவேன் அதுவரைக்கும் கொஞ்சம்” என அவன் இழுக்க பவானி புரிந்துக் கொண்டாள். நொந்துப் போய் சரி சரியென தலையாட்டினாள். படுக்கையில் அவன் படுக்க தரையில் அவள் படுத்து உறக்கம் இன்றி அன்றைய பொழுதை கண்ணீரினால் ஓட்டினாள் பவானி.

  

இப்போது தரையில் தருண் படுத்திருந்தான் படுக்கையில் ஹரிணி படுத்திருந்தாள்

  

”சாரி தருண் என்னை மன்னிச்சிடு எல்லாமே கொஞ்ச நாளுக்குதான், உன் மேல நம்பிக்கையில்லாம இல்லை சப்போஸ் நீ என்னை தொடறப்போ என்னை கட்டிப்பிடிக்கறப்ப என்னையும் மீறி நான் இளங்கோவை நினைச்சிட்டா வாய் தவறி இளங்கோன்னு சொல்லிட்டா உன் மனசு காயப்படும், அதனால என் மனசு எப்போ மாறுதோ அதுவரைக்கும் நீ காத்திருக்கனும் தருண் ப்ளீஸ் என்னை தப்பா நினைக்காத என்னை புரிஞ்சிக்க” என சொல்ல தருணும்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.