(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”வேணாம் அது எதுக்கு, இது என்ன நமக்கு முதல் கல்யாணமா இந்த சடங்கெல்லாம், ஏற்கனவே நீயும் செய்துட்ட நானும் செய்துட்டேன் இனியும் அதையே செய்ய எனக்கு பிடிக்கலை சங்கடமா இருக்கு”

  

“இதுல சங்கடப்பட என்ன இருக்கு ஹரிணி”

  

”இருக்கு தருண், திரும்பவும் அதே சடங்குகள் செய்றப்ப எனக்கு இளங்கோவோட நினைப்புதான் வரும், அதே போல உனக்கும் பவானியோட நினைப்புதானே வரும்“

  

”இல்லை எனக்கு பவானியோட நினைப்பு வராது”

  

”ஏன் வராது தருண், நீ அவளோட இந்த சடங்குகளை செய்யலையா”

  

”இல்லை நான் செய்யலை”

  

”ஏன் செய்யலை“

  

”ஏன்னா அப்போ பவானிகிட்ட நான் தீர்த்து சொல்லிட்டேன், இந்த சடங்குகள் செய்தா எனக்கு நிவேதினி நினைப்பு வரும் என்னால இதை செய்ய முடியாதுன்னு சொன்னேன் அதுக்கு பவானியும் ஒத்துக்கிட்டா”

  

”ஓ பார்த்தீங்களா பார்த்தீங்களா நீங்க கூட நிவேதினியை மறக்க முடியாம சடங்குகளை செய்யாம இருந்தீங்க, நீங்க அன்னிக்கு எந்த நிலைமையில இருந்தீங்களோ இப்ப எனக்கும் அதே நிலைமைதான் பவானி ஒத்துக்கிட்ட மாதிரி நீங்களும் ஒத்துக்கலாமே” என கேட்டதும் அவனுக்கு சுருக்கென வலித்தது ஆனாலும் வேறு வழியில்லாமல் வெறுப்பாக சரியென தலையாட்ட அதைக்கண்டு ஹரிணியோ

  

”ஓ சாரி தருண் உங்களுக்கு கஷ்டமாயிருக்கா சரி பரவாயில்லை அந்த சடங்குகளை செய்யலாம்” என சொல்ல தருண் உடனே முகம் மலர்ந்தான். அவசரகதியில் ஏற்பாடுகளைச்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.