சொல்ல தருண் மகிழ்ந்து அவளுடன் திருமண மேடையில் அமர்ந்தான், புதிதாக தாலி வாங்கி வைத்திருந்தாள் பவானி ஆனால் தருணோ
”சாரி பவானி நிவேதினியை என்னிக்குமே என்னால மறக்க முடியாது அவளுக்காக நான் வாங்கின தாலியிருக்கு எனக்கு கல்யாணம்னு ஆனா, அந்த தாலியைதான் நான் பயன்படுத்துவேன்னு என்னிக்கோ உறுதிமொழி எடுத்திருந்தேன்”
”இந்த விசயத்தை முன்னாடியே சொல்லியிருக்கலாமே தருண்”
”ஆமாம் மறந்துட்டேன் மறக்கனும்னு இல்லை இதை சொன்னா நீ வருத்தப்படுவேன்னு நினைச்சி அமைதியானேன் ஆனா, இப்ப இந்த தாலியை பார்த்தபின்னாடி எனக்கு நான் வாங்கின முதல் தாலிதான் நினைவுக்கு வருது, சாரி பவானி என்னால இந்த தாலியை ஏத்துக்க முடியாது நீ கொஞ்சம் எனக்காக இறங்கி வாயேன் ப்ளீஸ்”
”நானா நான் என்ன செய்யனும்”
”நீ வாங்கின தாலியை உண்டியல்ல போட்டுடு, நான் நிவேதினிக்கு கட்டின தாலியை வைச்சிருக்கேன் அதை உன் கழுத்தில கட்டறேன், என்னோட நிவேதினி எங்கயும் போகலை உன்கூடவே இருக்கா, உனக்குள்ள இருக்காங்கற எண்ணம் வந்தாலே தன்னால நான் மாறிடுவேன் என்ன சொல்ற பவானி உனக்கு இது சம்மதம்தானே” என சொல்ல அவளுக்கு கஷ்டமாக இருந்தது ஆயினும் அவனது காதல் விவகாரம் தெரிந்த பின்புதானே இந்த திருமணத்தை ஒப்புக் கொண்டாள், அதன் காரணமாக வேறு வழியில்லாமல் சரியென தலையாட்ட தருணும் நிவேதினிக்கு என வைத்திரந்த தாலியை மங்களம் ஒலிக்க மேளதாளம் முழங்க பவானியின் கழுத்தில் அணிவித்து அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான்.
அந்த நினைவு கலைந்தது, நிகழ்உலகிற்கு வந்தான் இப்போது தருண் இளங்கோ ஹரிணிக்கு கட்டிய தாலியை ஹரிணிக்கு அணிவித்தான், இதில் ஹரிணியின் மனம் குளிர்ந்தது, தருணுக்கோ வெறுப்பாக இருந்தது.
ஆயினும் ஒரு திருப்தி ஹரிணி தற்போது தன் மனைவி என்ற கர்வத்தில் இருந்தான் அவனின் கர்வம் அவனின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது, அதைக்கண்ட ஹரிணி மர்மமாக