(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

அதற்கடுத்து வந்த செலவுக்கான பணத்தை பார்த்து பார்த்து அவனே செய்தான், அவனது சேமிப்பு கரைவதைக் கண்டு அவனுக்கு கலக்கம் வந்தது, முகம் வாடியது, இருப்பினும் ஹரிணியிடம் இருந்து எப்போது வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்தான்.

  

தருண் சொன்னது போலவே வெள்ளிக்கிழமை வந்தது, தருணுக்கும் ஹரிணிக்கும் திருமணம் அதுவும் கோயிலில் ஏற்பாடு செய்திருந்தபடியால் மிகவும் எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஹரிணியை திருமணம் செய்துக் கொள்ள அவ்வளவு ஆர்வமுடன் இருந்தான் தருண். ஆனால் ஹரிணியோ அவனை வெறுப்பேற்றுவதற்காகவே இளங்கோவை நினைத்து உருகிக் கொண்டிருக்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது

  

”ஹரிணி முகூர்த்தத்துக்கு அரை மணி நேரம்தான் இருக்கு, இப்படியே இளங்கோவை நினைச்சிக்கிட்டு நீ இருந்தா எப்படி வா கல்யாணத்துக்கு நேரமாகுது” என சொல்ல அவளோ இளங்கோவின் தாலியை கையில் வைத்தபடி கண்கள் கலங்க

  

“இளங்கோ எனக்கு கல்யாணம் ஆனாலும் கண்டிப்பா உங்களை நான் மறக்க மாட்டேன், நான் செத்தாதான் உங்க நினைப்பு என்னை விட்டு போகும்” என சொல்ல தருணுக்கு ஆத்திரமாக இருந்தது

  

”அடிப்பாவி என்கூட இப்ப கல்யாணம் வைச்சிக்கிட்டு என்ன பேச்சு பேசறா பாரு, பேசட்டும் பேசட்டும்” என மனதில் நினைத்தவன் அவளிடம் கெஞ்சினான், அவளோ இன்னும் துக்கத்தில் இருக்க நேரம் வேறு ஓடிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் தருணின் பொறுமை போனது

  

”ஹரிணி ஸ்டாப்பிட் என்னால முடியலை நேரமாகுது வா கல்யாணம் செய்துக்கலாம்” என அழைக்க அவளோ கண்கள் கலங்க

  

”தருண் என்னோட உணர்ச்சிகளை உங்களால புரிஞ்சிக்க முடியலை, நீங்களும் என்னை போல சூழ்நிலையில கண்டிப்பா மாட்டியிருப்பீங்களே, பவானியை கல்யாணம் செய்றப்ப கூட நீங்க நிவேதினியை நினைச்சிப் பார்க்கலையா” என அவள் கேட்ட கேள்வி அவனுக்கு முள் போல

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.