சுருக்கென நெஞ்சில் குத்தியது.
சட்டென அவனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது
கோயிலில் பவானிக்கும் தருணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது, இருபக்க சொந்தங்கள் குழுமியிருந்தார்கள், திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக இருக்க தருண் மட்டும் நிவேதினியை நினைத்து உருகிக் கொண்டிருந்தான். அவளின் நினைப்பில் கண்கள் கலங்கியபடி இருக்க அவனை அவனின் தாய் உலுக்கினார், அவனோ மசியவில்லை. நேரம் ஓடியது இன்னும் கால் மணி நேரம் இருந்த நிலையில் பவானியே தருணை தேடி வந்தாள்
”தருண் நேரமாகுது அங்க ஐயர் நம்மளை கூப்பிடறாரு ப்ளீஸ் வாங்க தருண் போகலாம்” என சொல்ல அவனோ கண்கள் கலங்கியடிபயே கையில் இருந்த நிவேதினியின் போட்டோவை அவளிடம் காட்டி
”இவளை மறந்துட்டு இவள் இருக்க வேண்டிய இடத்தில உன்னை வைச்சி பார்த்து வாழ்க்கையை வாழ என்னால சத்தியமா முடியாது பவானி” என சொல்ல அவளுக்கு திக்கென்றது
இந்த திருமணம் நின்றால் என்னாகும் என பயந்தவள் அவனிடம் இருந்து நிவேதினியின் போட்டோவை வாங்கி
”இந்த கல்யாணம் நடந்தா நிவேதினி சந்தோஷப்படுவாங்க அவங்க ஆத்மா சாந்தியாகும் தருண்”
”அதெப்படி சொல்ற நானும் நிவேதினியும் எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தெரியுமா அவளை கல்யாணம் கட்டின பின்னாடி 15 நாள் ஹனிமூன் கொண்டாடினேன், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் 15 நாள் எப்படி போனதுன்னே தெரியலை சொர்க்கத்தை காட்டினா” என பேசிக் கொண்டு போக பவானிக்கு மனம் வலித்தது.
சரி புரியுது, பழையதை நினைச்சிக்கிட்டு இருந்தா எப்படி, இவ்ளோ தூரம் மேடை வரைக்கும் வந்த பின்னாடி இப்பவும் நிவேதினியை நினைச்சா நல்லாவாயிருக்கு நேரமாகுது தருண்