”எனக்கு புரியுது ஹரிணி நான் உன்னை தப்பாவே நினைக்கலை, நீ தூங்கு எல்லாம் கொஞ்ச நாளுக்குதானே பார்த்துக்கலாம் குட்நைட்” என்றான் அன்பாக ஆனாலும் முகத்தை கடுகடுவென வைத்திருந்தான்.
ஹரிணியோ உற்சாகமாக
”குட்நைட் தருண் குட்நைட் இளங்கோ” என சொல்ல அவனுக்கு திக்கென்றது
”ஏய் இப்ப எதுக்கு இளங்கோ பேரை சொன்ன“
”வழக்கமா நான் தினமும் அவனுக்கு குட்நைட் சொல்லி பழகிட்டேன் அதான்”
”ஓ சரி சரி” என சலித்துக் கொண்டான்
”பார்த்தியா குட்நைட் இளங்கோன்னு சொன்னதுக்கே உனக்கு பிடிக்கலையே, எப்படி நான் உன்கூட இருக்க முடியும் சொல்லு”
”எனக்குப் புரியுது ஹரிணி நீ தூங்கு” என வெறுப்பாக சொல்லிவிட அவளும் நிம்மதியாக உறங்கிப் போனாள்.
ஆனால் தருணுக்கோ மனம் கலங்கி கண்கள் வழியாக கண்ணீர் வரத்தொடங்கியது, இது ஏமாற்றத்தால் வந்ததா அல்லது அவனது ஆசை நிராசையானதால் வந்ததோ அந்த நாளை கண்ணீருடன் கரைத்தான் தருண்.
மறுநாள் காலையில் பொழுது விடிந்ததும் தருண் எழுந்தான். அழுது அழுது எப்போது உறங்கினானோ அவன் எழுந்து பார்க்கையில் மணி 9 என காட்டியது. அவசரமாக ஹரிணியை தேட அவள் இல்லை உடனே பதறி அவளுக்கு போன் செய்ய அவளோ
”குட் மார்னிங் தருண், நான் ஆபிசுக்கு போய்கிட்டு இருக்கேன்” என்றாள் அதைக்கேட்டு