(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 77 - பிந்து வினோத்

77. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

லாவண்யா சொல்வதன் பின்னால் இருக்கும் காரணத்தை புரிந்துக் கொண்டவராக தலை அசைத்தார் டாக்டர் கமலநாதன்!

  

உங்க டென்ஷன் எனக்குப் புரியுது... ஜெனரல் எக்ஸாமினேஷன், எம்ஆர்ஐ ஸ்கான் செய்து இன்னைக்கே ரிசல்ட் பார்த்திருவோம்... தேவைப்பட்டா மத்த டெஸ்ட் செய்யலாம்!“

  

ஓகே டாக்டர்... அப்படியே செய்யலாம்,” என்றாள் லாவண்யா!

  

நீங்க ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்... ஈவ்னிங் ஆனாலும் கூட ஆகும்...”

  

பரவாயில்லை டாக்டர், நாங்க காத்திருக்கோம்...”

  

அப்போ ஓகே... இந்த ஹாஸ்பிட்டல்லேயே டெஸ்ட்ஸ் செய்திடலாம். நீங்க போய் நர்ஸ் கிட்ட இந்த ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுங்க... நான் ரிசல்ட் வந்தப் பிறகு ஈவ்னிங் உங்களை திரும்ப மீட் செய்றேன்!”

  

“ஓகே, தேங்க்ஸ் டாக்டர்!” என சொல்லி இருவரும் எழுந்துக் கொண்டார்கள்!

   

டாக்டர் கமலநாதன் சொன்ன செக்கப், ஸ்கான் அனைத்தையும் முடித்து விட்டு, மருத்துவமனையிலேயே விவேக்கும், லாவண்யாவும் காத்திருந்தார்கள்! மாலையில் ரிசல்ட் வந்து விட்டதாக சொல்லி டாக்டர் அறைக்கு அழைக்கப்படும் வரையில் இருவரும் உணவு உண்ணக் கூட இல்லை!

  

விவேக், நீங்க சந்தேகப் பட்டது சரி தான், உங்களுக்கு ட்யூமர் எல்லாம் இல்லை... செக்கப் ரிசல்ட் எல்லாம் நீங்க ஹெல்தியாக இருப்பதா தான் சொல்லுது... ஸ்கான் ரிசல்ட்ஸ்லேயும் எந்த பிரச்சனையும் இருப்பதா சொல்லலை... உங்க கிட்ட ப்ரெயின் டியூமருக்கான சிம்ப்டம்ஸ் இருப்பதாவும் தெரியலை... பழைய ரிப்போர்ட் ஒருவேளை நீங்க சஜஸ்ட் செய்ததுப் போல மாறி இருக்க வாய்ப்பு இருக்கு...”

  

தேங்க்ஸ் டாக்டர்...” என்றான் விவேக், காலையில் இருந்து முதல் முறையாக எளிதாக

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.