அணைத்துக் கொண்டான் விவேக்!
“அப்புறம் வேறென்ன, டாக்டர் தாமஸை போய் பார்த்து கத்திட்டு, நேரா இங்கே வந்தேன்!”
பாரதியின் முகமும் கூட கொஞ்சம் தெளிவானது! ஆனாலும் யோசனையுடன் கணவனைப் பார்த்து, “ஏதோ அது வரைக்கும் பரவாயில்லைங்க... ஆனால், ப்ரெயின் ட்யூமர் இருக்க அந்த இன்னொரு பேஷன்ட்டுக்கு விஷயம் தெரியுமா, இல்ல, அவருக்கும் ரிப்போர்ட் மாத்தி கொடுத்துட்டாங்களா??” என கவலையுடன் வினவினாள் பாரதி!
“அது எப்படி நீயும் அதையே கேட்குற? லாவண்யாவும் நான் இங்கே வரதுக்கு முன்னாடி அவக் கிட்ட பேசினப்போ, இதையே தான் கேட்டா...”
பாரதி முகத்தில் முதல் முறையாக புன்னகை தோன்றியது!
“ரிப்போர்ட் எப்படி மாறிச்சாம்? அன்னைக்கு பார்த்த சிஸ்டர் உஷாக்கு ஏதோ ஞாபக மறதின்னு டாக்டர் சொன்னாரே, அதனாலேயா?”
“நானும் அப்படி தான் நினைச்சேன் ரதி... ஆனால், எல்லாம் தலைகீழ்... என்னை பார்த்த உடனேயே சிஸ்டர் கரெக்ட்டா ஞாபகம் வச்சு பேசினாங்க... அந்த விவேக்குமார் ரிப்போர்ட் வாங்க வந்தப்போ அவருடையது மிஸ் ஆகி என்னுடையது இருக்கவே, அப்போதே அவங்க கண்டுபிடிச்சிட்டாங்களாம்... விவேக்குமாருக்கு டூப்ளிகேட் ரிப்போர்ட் கொடுத்துட்டு, என்னை கான்டாக்ட் செய்ய முயற்சி செய்துட்டே இருந்திருக்காங்க... நான் தான் அவங்க ஃபோன்காலை அட்டென்ட் செய்யலை... எப்போதும் அவங்க தான் ரிப்போர்ட் எடுத்து டாக்டர் கிட்ட கொடுப்பாங்களாம்... அன்னைக்கு என்னோட கெட்ட நேரம், அவங்க பிஸியா இருக்கவே டாக்டரே எடுத்து கொடுக்க வேண்டியதாச்சு... நான் விவேக்ன்னு பேர் சொல்லவே அவர் தப்பா எடுத்து கொடுத்துட்டார்... லாவண்யா சொன்னது போல் அவரை sue செய்திருக்கனும்...”
“டாக்டர் சிஸ்டருக்கு தானே வயசாச்சு ஞாபக மறதின்னு எல்லாம் சொன்னார்???”
“சொல்வார் அவருக்கு என்ன? அந்த சிஸ்டர் ரொம்ப நல்லவங்க ரதி... அது எப்படி இத்தனை விஷயம் நினைவில் வச்சு இருக்கீங்கன்னு கேட்டா, மெமரி இல்லாமல் நர்ஸ் வேலை