(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 02 - சசிரேகா

   

மருத்துவரிடம் செல்லும் வழியில் ரிஷியிடம் நந்தினி பேசலானாள்.

  

உங்களுக்கு மீன்கள்ன்னா ரொம்ப பிடிக்குமா அத்தான்”  என்றாள் ஆர்வமாக

  

ஏன் கேட்கற

  

இல்ல வீடு முழுக்க மீன் சம்பந்தப்பட்ட கைவினைப்பொருட்கள் இருக்கவே கேட்டேன் அத்தான்

  

அதுவா நான் பல நாடுகளுக்கு தொழில் சம்பந்தமா போயிட்டு வருவேன் ஒவ்வொரு முறையும் போய்ட்டு வரும்போதும் அங்கிருந்து ஏதாவது வாங்கிட்டு வருவேன்.”

  

சரி அது ஏன் எல்லாமே மீன் சம்பந்தப்பட்ட பொருளாவே இருக்கு அத்தான்

  

அதுவா எனக்கு மீன்கள்னா ரொம்ப பிடிக்கும் சின்ன வயசிலிருந்து தொட்டியில மீன் வளர்த்து பழக்கம். நான் மீன்களை சாப்பிடறதில்லை. ஆனா மீன்களை பார்த்தா பிடிக்கும். நான் வெளிநாடுகளுக்கு போறப்ப ஷாப்பிங் கடைகள்ல என்ன இருக்கோ அதை வாங்கி வருவேன்

  

அத்தான் அப்ப அர்ஜூன் அண்ணா உங்களுக்கு என்ன வேணும்

  

என் நண்பன் கூட படிச்சவன் என் கூடவே இப்ப வரைக்கும் இருக்கான். எனக்காக எதையும் செய்வான்

  

சிறிது நேரம் மௌனமானாள், நந்தினிக்கு இதற்கு மேல் என்ன கேட்பது என்ன பேசுவது என  அவளுக்கு தெரியவில்லை, ஆனால் ரிஷிக்கோ அவள் பேசிக்கொண்டிருந்தால் நல்லாயிருக்கும் என நினைத்தவன் அவளை வேண்டுமென்றே உசுப்பினான்

  

நந்தினி ஏன் பேசாம சைலன்டா வர்ற

  

இல்ல அத்தான் என்ன பேசறதுன்னு தெரியல அதான்  உங்க சொந்தக்காரங்க எல்லாரும்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.