(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

அதெல்லாம் வேணாம் மாத்திரை கொடு போதும்என அவன் சொல்லவும் அவனை முறைத்துக்கொண்டே

  

சரி இந்தா எழுதிட்டேன்என மருந்து சீட்டை தர அவனும் அதை வாங்கிக்கொண்டு எழவும் கூடவே அவளும் எழுந்தாள். அவள் எழுவதை பார்த்த கௌதம் அவளிடம்

  

நீங்க கொஞ்சம் வெளிய இருங்க, நான் என் நண்பனோட பேசனும் ஒரு முக்கியமான விசயம்என கூறவும் அவளும் சரியென தலையாட்டிவிட்டு வெளியே சென்றாள். அவள் போனதும் கௌதம் ரிஷியிடம்

  

டேய் யார்டா இந்த பொண்ணு ரொம்ப அழகாயிருக்காஎன ஆர்வமாக கேட்ட அவனை முறைத்தான் ரிஷி

  

எதுக்கு முறைக்கற

  

இதான் முக்கியமான விசயமா

  

ஏன் சொல்ல மாட்டியா

  

ஆமாம்

  

உனக்கு பொண்ணு பார்க்கறாங்கன்னு உங்கம்மா சொன்னாங்க” என ரிஷி சந்தேகமாக கேட்க

  

ஆமா பார்க்கறாங்க அதுக்கென்ன

  

அப்புறம் எதுக்கு நந்தினியை பார்க்கற

  

டேய் பொண்ணுதான் பார்க்கறாங்க விட்டா நாளைக்கே எனக்கு கல்யாணமா நடக்கப்போகுது இன்னும் எந்த பொண்ணும் செட் ஆகலஎன அவன் சொல்லவும் அவனை முறைத்துவிட்டு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.