(Reading time: 13 - 26 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

சார்ந்தவங்களா எங்க இரண்டு பேருக்கும் நடுவில இருக்கற உறவு எப்படிபட்டது” என கேட்க கமிஷனர் புரிந்துக் கொண்டார்

  

”ஓகே எனக்குப் புரியுது உங்களோட கோபத்தை, நான் புரிஞ்சிக்கிட்டேன், நான் உறுதியா சொல்றேன் உங்க ரெண்டு பேரோட அப்பா அம்மா வேற வேறதான்” என சொல்ல அகத்தியனுக்கு நிம்மதி வந்தது உடனே நாச்சியாவிடம்

  

”போதுமா இப்ப உனக்கு திருப்தியா, நைட்டெல்லாம் என்னை தூங்கவிடாம படாதபாடு படவைச்சியே கேட்டல்ல நீயும் நானும் வேற வேற அப்பா அம்மாவுக்கு பிறந்தவங்கதான்” என சொல்ல அவளோ

  

”அது எப்படி கமிஷனருக்கு தெரியும்” என கேட்க அகத்தியன் திடுக்கிட்டு உடனே கமிஷனரை பார்க்க அவரோ திருதிருவென விழித்தார்

  

”சொல்லுங்க சார் உங்களுக்கு எப்படி தெரியும் சொல்லுங்க” என கேட்க கமிஷனரோ துக்க பெருமூச்சுவிட்டு

  

”அந்த கேஸ் பைல்ல 100 பேர் இறந்துட்டாங்கன்னு இருக்கே, அது எப்படி ஏதுன்னு பார்த்தீங்களா” என கேட்க நாச்சியாவும் அகத்தியனும் இல்லை என தலையாட்டினார்கள்.

  

”உண்மையான அகத்தியன் நாச்சியாவுக்கு குழந்தைகள் இல்லை, அதனால அவங்க மக்களுக்கு உதவி செய்தபடியே காலத்தை ஓட்டினாங்க, திடீர்ன்னு என்ன ஆச்சி ஏதாச்சின்னு தெரியலை, அவங்க நடத்தி வந்த அகத்தியன் கார்மெண்ட்ஸ்ல தீ பிடிச்சது, அதை பார்க்கப் போன இவங்களும் தீயில மாட்டிக்கிட்டாங்க, 100 பேர் அன்னிக்கு வேலை பார்த்துட்டு இருந்தாங்க, எல்லாருமே தீயில கருகி இறந்துப் போனாங்க, அவங்களை காப்பாத்த போன அகத்தியன் நாச்சியாவும் இறந்துப் போனாங்க, அவங்க இறந்தாலும் அவங்க எழுதி வைச்ச உயில் படி அவங்க சொத்து மொத்தமும் ஊருக்கு சேரும்னு இருந்தது. அதனாலயே நமக்காக நல்லது செய்தவங்களுக்கு மக்களே ஊருக்கு மத்தியில சிலை வைச்சாங்க”

  

”அப்போ எங்கப்பா அம்மா யாரு“

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.