(Reading time: 13 - 26 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”நீ குப்புற படு சொல்றேன்” என சொல்ல அவனும் குப்புற படுத்தான், மறுபடியும் அவனை அப்படி இப்படி என நகர வைத்து சரியாக அந்த மார்க்கில் கொண்டு வந்தாள்

  

”அகத்தியா இதை வைச்சிப் பார்த்தா கண்டிப்பா யாரோ அவங்களை கொன்னிருக்கனும், கொன்னுட்டு உடலை கொண்டு வந்து இங்க வீசிட்டு போயிருக்காங்க, அதான் உடம்பு குப்புற தாறுமாறா விழுந்து கிடக்கு, அவசரத்திலயும் யாரும் பார்த்துடப் போறாங்கங்கற பயத்திலயும் இப்படி செய்திருக்காங்க” என சொல்ல அகத்தியன் எழுந்து நின்று அவளைப் பார்த்தான்

  

”என்ன அப்படி பார்க்கற”

  

”இப்ப நீ சொன்னது சரியா தவறான்னு நான் கண்டுபிடிக்கிறேன் போ நீ போய் படு போ”

  

”எது நானா”

  

”என்னை மட்டும் படுக்க வைச்சல்ல போ போங்கறேன்ல” என சொல்ல அவளோ நொந்தபடியே சென்று குப்புற படுத்தாள். அவனோ அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு

  

”இல்லை நாச்சியா குப்புற படுக்காத மல்லாக்க படு” என சொல்ல அவளும் திரும்பிப் படுத்தாள். அவளையே ஏற இறங்கி ஆசையாக பார்த்தான் அவளோ கடுப்பானாள்

  

”அகத்தியா ஸ்டாப்பிட் வந்த வேலையை பாரு என்னை ரசிக்காத, நான் கடுப்பாயிடுவேன்”

  

”சரி சரி வெயிட்” என சொல்லி அக்கம் பக்கம் பார்த்தான்.

  

வாசற்படிக்கு மிக அருகிலேயே அவ்விடம் இருந்தது

  

”நாச்சியா நீ சொன்னது சரிதான் அவசர அவசரமா இரண்டு உடல்களையும் கொண்டு வந்து இங்க போட்டுட்டு போயிருக்காங்க, அதுலயும் நாச்சியா உடல் மல்லாக்க இருந்திருக்கு ஆனா, அகத்தியன் உடல் குப்புற இருந்திருக்கு, இதுக்கு என்ன அர்த்தம் முதல்ல இறந்தது நாச்சியாதான், அவளோட மரணத்தைப் பார்த்தபடி இறந்தது அகத்தியன் இவ்ளோதான்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.