(Reading time: 13 - 26 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

என்னால கண்டுபிடிக்க முடிஞ்சது சரி சரி எழுந்து வா” என சொல்ல அவளோ அசைய மறுத்தாள்

  

”நாச்சியா எழுந்து வாங்கறேன்ல” என சொல்ல அவளால் அசைய இயலவில்லை

  

”அகத்தியா என்னால அசைய முடியலை, யாரோ என்னை இறுக்கமா பிடிச்சிருக்கற மாதிரி தோணுது” என சொல்ல அதிர்ந்தான்

  

”என்னடி சொல்ற” என அலறிக் கொண்டே அவளின் கையை பிடித்து இழுக்க முயன்றான் முடியவில்லை முதலில் கையை கூட அவனால் இழுக்க இயலவில்லை

  

”நாச்சியா என்னால முடியலை”

  

”என்னை காப்பாத்து அகத்தியா ப்ளீஸ் என்னை யாரோ அழுத்தறாங்க என்னால பேச முடியலை மூச்சுவிட முடியலை ஹெல்ப்” என அலறினாள் அகத்தியனுக்கு திக்கென்றது அவனது பலம் கொண்டு அவளை இழுக்க முயன்றான். முடியவில்லை அழவே தொடங்கினான்

  

”நாச்சியா நாச்சியா இரு என் உயிரை கொடுத்தாவது நான் உன்னை காப்பாத்தறேன்” என சொல்லி முடித்து அவளை இழுக்க பட்டென எழுந்து வந்தாள். அவ்வளவுதான் அவளை அப்படியே வாரி தூக்கிக் கொண்டு அந்த கார்மெண்ட்ஸ் விட்டு தலைதெறிக்க ஓடி வெளியேறி பைக்கிடம் வந்து அவளை பைக்கில் அமர வைத்தான் அவளோ அவனின் செயலில் கவரப்பட்டு அவனின் கன்னத்தில் முத்தம் வைக்க அவனோ கோபத்தில் அவளை அடிக்க கை ஓங்கி பின் அமைதியானான்.

  

”பைத்தியமா உனக்கு நான் எவ்ளோ பயந்தேன் தெரியுமா ஒரு நிமிஷம் உசுரே போயிடுச்சிடி” என வருந்த நாச்சியாவும்

  

”ஆமாம் எனக்கும் ஒரு மாதிரியாதான் இருந்தது, இரண்டு பேர் சேர்ந்து என்னை பிடிச்சி இழுத்த மாதிரி அதை நினைக்கறப்ப இப்பக்கூட என் உடல் சிலிர்க்குது ஆமா உனக்கு இந்த மாதிரி ஏதாவது தோணிச்சா”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.