(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அர்ஜூனை தடுத்தார் வார்டன்

  

இது லேடிஸ்ங்க இருக்கற இடம் நீங்க அந்தம்மாகிட்ட கொடுங்க அவங்க அதை கொண்டு போவாங்க நீங்க கிளம்புங்கஎன சொல்லவும் அவனும் சிரித்துவிட்டு லக்கேஜை பெண் ஊழியரிடம் தந்துவிட்டு நந்தினியை பார்த்தான்.

  

உண்மையிலேயே தன் தங்கையாகவே அவளை மனதில் பாவித்துவிட்டான் அர்ஜூன்

  

வேளா வேளைக்கு சாப்பிடனும் சரியா

  

சரிங்கண்ணா

  

ஏதாவது பிரச்சனை வந்தா வார்டன் கிட்ட சொல்லனும் தயங்ககூடாது பயப்படக்கூடாது. அவங்க நல்லவங்கதான் சரியா

  

சரிங்கண்ணா

  

நான் உனக்கு மொபைல் போனும் சிம்மும் வாங்கிட்டு வரேன். பத்திரமா வைச்சிக்க என் நெம்பர் இந்தா இதுக்கு போன் பண்ணுஎன தன்னிடம் இருந்த விசிட்டிங் கார்டு தந்தான். அதை வாங்கிக்கொண்டாள் நந்தினி.

  

ஏதாவது எமர்ஜென்சி இல்லை வெளியே போகனும்னா கூட என்னை கூப்பிடு, புது ஊர் எங்கயாவது போய் தொலைஞ்சிடப்போற, நான் நாளைக்கு காலையில வந்து உன்னை இன்டர்வியூ நடக்கற இடத்துக்கு கூட்டிட்டு போறேன் ஓகே வா

  

சரிங்கண்ணா நான் நாளைக்கு காலையில உங்களுக்காக வெயிட் பண்றேன்

  

அப்பா அம்மா மாமா பாட்டியை நினைச்சி சாப்பிடாம இருந்திடாத வேளா வேளைக்கு சாப்பிடனும் பசிக்கலைன்னாலும் சாப்பிடனும்

  

சாப்பிடறேன் அண்ணா

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.