டைவர்ஸ் கதை கூட ஏதோ பழைய சண்டை காரணமா இருக்கும்னு நினைச்சேன்... உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிட்டா எல்லாம் சரி ஆகிடும்னு தோணிச்சு... ஆனால் நான் இப்போ உங்க மனைவி எனும் இடத்துல இருந்தாலும், அவங்க நினைவுகள் இல்லாம இருக்குறதால, நான் உங்க மனைவியா இருக்க முடியாதுன்னு சொன்னீங்க பாருங்க, அங்கே தான் உங்க மேல எனக்கு இருந்த அன்பு, மரியாதை எல்லாமே எக்குத் தப்பா ஏறிப் போச்சு...”
“கீர்த்தி...”
“நான் சும்மா சொல்லலை, உண்மையா சொல்றேன்... உங்க மனைவி கிருத்திகாவை பத்தி எனக்கு எதுவும் தெரியாது... ஆனால் உங்களை தெரியும்... உங்களுக்கு அவங்க மனசு மேல தான் காதல், அவங்க அழகு மேல இல்லைன்னு தெரியும்... இதை விட ஒரு பொண்ணுக்கு வேற என்ன வேணும்?”
“ப்ச் கீர்த்தி...”
“இதை நான் சும்மா பேச்சுக்கு சொல்லலை, சீரியஸா சொல்றேன்... நான் வேரூர்ல டாக்டர் வீட்டுல தங்கி இருந்தப்போ சில பேர் என் கிட்ட வந்து அன்பு ஒழுக பேசுவாங்க... யாரு என்னன்னு தெரியாது... ஒருவேளை எனக்கு தெரிஞ்சவங்களா இருக்குமோன்னு யோசிப்பேன்... நல்ல வேளை ஒவ்வொரு தடவையும் டாக்டரோ அவரோட மனைவியோ என்னை அந்த கீழ்த்தரமான புத்திகாரங்க கிட்ட இருந்து காப்பாத்தினாங்க... ஞாபகம் இல்லாம ஒரு பொண்ணு இருக்கான்னு தெரிஞ்ச உடனே அவ மேல பரிதாப படாம, இளிச்சு பேசி தப்பா நடந்துக்க அந்த சின்ன ஊருல கூட எத்தனைப் பேரு...! ஒரு அளவுக்கு மேல எனக்கு பாதுகாப்பு இல்லைன்னு தான் டாக்டர் வெற்றி அண்ணா வீட்டுக்கு என்னை அனுப்பவே செய்தார்... அது போல எல்லாம் கேவலமான மக்கள் இருக்க உலகத்துல உங்களை போலவும் ஒருத்தர்...! நீங்க என் கணவர், உங்களுக்கு என் மேல எல்லா உரிமையும் இருக்குன்னு இந்த உலகமே சொல்லுது! ஆனாலும் பழைய நினைவு இல்லாம இருக்க உன்னை என் மனைவியா நினைக்குறது தப்புன்னு சொல்றீங்க பாருங்க, உங்களை நான் ரொம்பவே மதிக்கிறேன்ங்க... நீங்க தான் பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்!”
“கீர்த்தி...! சாரிம்மா... விடு இதுக்கு மேல ரொம்ப ஸ்ட்ரெயின் செய்யாதே... உனக்கு