(Reading time: 24 - 48 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

நீ பேசாத வாயை மூடு, அவளை கொண்டு வந்து விட்டாச்சில்ல கிளம்பு, நானே அவளை ஹாஸ்டல்ல விட்டுடறேன்

  

இல்லைண்ணா அது வந்து நான்

  

போதும் நீ செஞ்ச வரைக்கும் போதும் வெளிய போ

  

முடியாதுண்ணா நீங்க அடிச்சதால அவளை நான் கூட்டிட்டு வரலை எங்கயோ ஓடிடுவேன்னு சொன்னீங்கன்னுதான் கூட்டிட்டு வந்தேன், ப்ளீஸ் அண்ணா நானும் இருக்கேன் பேசுங்க

  

உன்னை வைச்சிட்டு பேச முடியாது

  

நான் வேணா இங்கயே இருக்கேன் கிட்ட கூட வரலை. நீங்க ரூம்ல பேசி முடிச்சிட்டு என்கிட்ட அவளை விட்டுடுங்க நான் பர்மிஷன்ல அவளை கூட்டிட்டு வந்தேன் நேரத்தோடு கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுடனும்என அவன் அமைதியாக சொல்லவும் அதைக்கேட்டு ரிஷியும் சரியென தலையாட்ட அர்ஜூன் ஹாலில் இருந்த சோபாவில் படுத்து விட்டான். கண்கள் மூடி உறங்க ஆரம்பித்தான். அவனைப்பார்த்து முறைத்துவிட்டு நந்தினியை இழுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்று கதவை சாத்தியவன் அவளிடம் நெருங்கினான்

  

எந்த ஹாஸ்டல்ல இருக்க

  

ஒர்க்கிங் வுமன்ஸ் ஆஸ்டல்

  

எந்த ஏரியா

  

தாம்பரம்
உன் போன் நெம்பர் கொடுஎன கேட்க அவளும் சொன்னாள். அதை அப்படியே தன் போனில் பதிந்து கொண்டவன் தன் நெம்பரையும் அவளுக்கு தந்தான். அவளை அங்கிருந்த கட்டிலில் அமரவைத்து மெதுவாக பேசினான்

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.