“ஓ அந்த காரணங்களுக்காகதான் என்னை உனக்கு பிடிச்சிருக்கு அவ்ளோதானா”
“அது வந்து” என அவள் தயங்க தயங்க அவனே
”இங்க பாரு எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு புரியுதா”
“ம்”
“என் தாத்தா வீட்ல 3 பொண்ணுங்களை வரசொல்லியிருக்காரு எனக்காகவாம்”
“ம்”
“அதுல ஒரு பொண்ணை செலக்ட் பண்ணி என் தலையில கட்டப்போறாங்களாம்”
“ம்”
“இன்னும் 5 நாள்தான் டைம் இருக்கு 5 நாள் கழிச்சி அந்த பொண்ணுங்க வீட்டுக்கு வருவாங்க அவங்களுக்கு பரிட்சை வைச்சி செலக்ட் பண்ணுவாராம்”
“ம்”
“நீ என்ன பண்ற நல்லா யோசி, 4 நாள் டைம் தரேன், 5வது நாள் சாயங்காலம் 6 மணிக்குள்ள நீ என் வீட்டுக்கு வர்ற 1 மாசம் தங்கி இருந்து போட்டியில ஜெயிக்கற”
”நானா ஆனா எதுக்கு” என அவள் கேட்கவும் கோபமாக அவளை முறைத்தான்.
”ஏன் வரமாட்டியா”
“இல்லை நான் அங்க வந்து என்ன செய்யப்போறேன், அண்ணா சொன்னாரு அந்த 3