(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“இல்லை அத்தான் நல்லா வசதியாவும் இருக்கு”

   

“கொஞ்ச நாள்தான் அங்க தங்கனும் அப்புறம் இடம் மாறிடலாம்” என அவன் தன் வீட்டை பற்றி நினைத்துக்கொண்டே சொல்ல

   

“இடம்னா வேற ஹாஸ்டலா அத்தான்” என அவள் சொன்னதும் அவனுக்கு சட்டென கோபம் வந்தது

   

”ஏன் வாழ்நாள் முழுக்க ஹாஸ்டல்லயே இருந்து வாழ்ந்து முடிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டியா” என அவன் கத்த நந்தினிக்கு பேசவே முடியவில்லை. அவள் மௌனமானாள். அவளிடம் இருந்து பதில் வராமல் போக அதற்கும் கத்தினான்

   

”ஒருத்தர் பேசினா பதில் பேசனும் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என்னை அவமானப்படுத்தறியா”

   

“அய்யோ அத்தான் அப்படியில்லை நான் எதையும் நினைச்சி அப்படி சொல்லலை அத்தான் நீங்க என்ன சொல்ல வர்றீங்களோ அதை சொல்லுங்க அத்தான் நான் கேட்கறேன்”

   

“இல்லை நந்தினி இன்னிக்கு நான் கேட்கறேன் நீ உன் மனசுல இருக்கறத சொல்லு” என அவன் நேரடியாகவே சொல்லிவிட அவளுக்கு சட்டென பயம் ஒட்டிக்கொண்டது

   

”அது வந்து அத்தான்” என அவள் தடுமாறி பேசவும் ரிஷி மெதுவாக

   

”இதப்பாரு நந்தினி எதுவாயிருந்தாலும் பேசு தப்பில்லை. நான் கோபப்படவே மாட்டேன் சொல்லு நீ என்னதான் நினைக்கற”

   

“எதைப்பத்தி அத்தான்”

   

“ம் இப்ப நீ எதுக்கு என்னை அத்தான்னு கூப்பிடற அதுக்கு பதில் சொல்லு”

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.