வர சொல்றார். நீ கொஞ்சம் செஞ்சு வச்சுடுறீயா???” என்ற சிவகாமியிடம்,
“சரி அத்தை,” என்ற கீதா, அவர்கள் இருவரும் கிளம்பிய பின், சிவகாமி சொன்னதுப் போல பொரியல் செய்ய ஆயத்தமானாள்.
வெண்டைக்காயை நறுக்கியப் படி கிருத்திகா கேட்ட பழைய விஷயங்களை மனசுக்குள் அசைப் போட்டாள்.
கிருத்திகாவை முதல் முதல் எப்போது சந்தித்தாள்?
யோசித்தவளின் முகத்தில் தனாக மலர்ச்சி தோன்றியது! விஜய் அவனின் பெற்றோருடன் அவளை பெண் கேட்டு வந்த அன்று கிருத்திகாவையும் உடன் அழைத்து வந்திருந்தான்.
பழைய நிகழ்வுகள் கீதாவின் கண் முன் தோன்றியது...!
🌼🌸❀✿🌷
கீதாவின் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தது! தலையில் ரயில்வண்டி ஓடுவது போல ஒரே களேபரம்!
காலையில் தூங்கி எழுந்தது முதலே அவளிடம் பரபரப்பு இருந்துக் கொண்டே இருந்தது.
விஜய் அவனின் குடும்பத்தினரோடு அன்று வீட்டிற்கு வருகிறான்!
பத்து நாட்களுக்கு முன்பு வரை விஜயை அவளுக்கு தியாகுவின் நண்பன் என்ற அளவில் மட்டும் தான் பரிச்சயம் இருந்தது. எப்போதாவது தியாகு அவனைப் பற்றி புகழ்ந்து பேசியும் கேட்டிருக்கிறாள்.
அவளை பார்க்கும் போதெல்லாம் மலரும் விஜயின் முகத்தையும், அவளுக்காக எப்போதும் இருக்கும் அவனின் அந்த சின்ன புன்னகையையும் பற்றி எல்லாம் அவள் அதிகமாக